எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் ஈஸ்வரியின் இந்த நிலைமைக்கு ஆதி குணசேகரன் தான் காரணம் என்பது ஜனனிக்கு தெரிந்தாலும் அவர் மீது போதுமான ஆதாரம் சிக்காததால், அதை வலைவீசி தேடி வருகிறார். இந்த வழக்கில் ஜீவானந்தத்திற்கு தொடர்பு இருப்பதாக ஆதி குணசேகரன் திசை திருப்பி விட்டதால், அவரை தனிப்படை அமைத்து கைது செய்ய கோர்ட்டும் உத்தரவிட்டது. இதனால் ஜீவானந்தத்தை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
ஞானத்தால் தெம்பான ஆதி குணசேகரன்
சிறையில் இருந்த ஞானம் ஜாமினில் விடுதலை ஆகி வந்ததால் குஷியாகும் ஆதி குணசேகரன், அவரிடம் நடந்ததையெல்லாம் கூறுகிறார். வழக்கம்போல் ஞானமும் ஆதி குணசேகரன் பக்கம் செல்ல, அதனால் குஷியான ஆதி குணசேகரன், என் தம்பி ஞானம் என்கூட இருப்பது எனக்கு யானை பலத்தை கொடுக்கிறது என வீர வசனம் பேசுகிறார். சக்தி ஜனனிக்கு சப்போர்ட் செய்வதால், ஞானமும் தன் மீது சந்தேகப்பட்டு அவர்கள் பக்கம் சென்றுவிடுவானோ என பயந்ததாகவும் ஆதி குணசேகரன் கூறுகிறார். அவர் போடும் டிராமாவையெல்லாம் பார்த்து தலையில் அடித்துக் கொள்கிறார் நந்தினி.
34
விசாரணைக்கு வந்த புது போலீஸ் அதிகாரி
இதையடுத்து ஈஸ்வரி வழக்கை விசாரிக்க வந்திருப்பதாக கூறி ஒரு புது போலீஸ் அதிகாரி வீட்டுக்கு வருகிறார். அவர் வந்ததும் ஜீவானந்தத்தை பற்றி விசாரிக்கப் போகிறேன் என்று சொன்னதும் கடுப்பான ஆதி குணசேகரன், அவனைப் பற்றி இங்க என்ன விசாரணை... அவனுக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு என கேட்கிறார். அதற்கு அவர், சார் உங்க வீட்டு பெண்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் வர சொல்லுங்க என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே எண்ட்ரி கொடுக்கிறார் ஜனனி. அவருடன் சக்தி, ரேணுகா, நந்தினியும் வருகிறார்கள்.
இதையடுத்து, ஜனனியிடம், மொத்த டிபார்ட்மெண்டும் ஜீவானந்தத்தை தேடிட்டு இருக்கு. அவரைப்பத்தி தகவல் தெரியுமா என கேட்கிறார் போலீஸ். எங்களுக்கு எதுவும் தெரியாது என ஜனனி சொன்னதும், நல்லது நாங்க தேடி கண்டுபிடிச்சிடுவோம். அப்படி அவனை பிடிச்சோம்னா மொத்த கதையையும் முடிச்சிடுவோம் என சொல்கிறார் அந்த புது போலீஸ் அதிகாரி. அவரை பிடிக்குறேன்னு இங்க வேற யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள் என கூறுகிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது? ஜீவானந்தத்தை பற்றி போலீசுக்கு ஏதேனும் க்ளூ கொடுத்தாரா ஜனனி? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.