Revathi Revealed the Truth About Karthik : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தன்னை காப்பாற்றியது ரேவதி என்று கார்த்திக்கிற்கு தெரியவர அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
தன்னை காப்பாற்றியவர் யார் என்று கண்டுபிடித்த கார்த்திக் ராஜா
Revathi Revealed the Truth About Karthik : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கோயில் இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள நடந்த போராட்டத்தில் கார்த்திக்கை எப்படியோ டிராமா பண்ணி ரேவதி காப்பாற்றிவிட்டார். அதில் எங்கு தனது அம்மாவிடம் கார்த்திக் மாற்றிவிடுவாரோ என்று பயந்து மருத்துவமனையிலிருந்து அம்மாவிற்கு போன் போட்டு அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்து தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொண்டார். அதன் பின்னர், கார்த்திக் உள்பட அவரது அண்ணன்கள் பத்திரத்திரத்தில் கையெழுத்திட கோயில் இடம் சொந்தமானது.
23
கார்த்திக்கை பற்றிய உண்மையை சொன்ன ரேவதி
இதைத் தொடர்ந்து எப்படி சாமுண்டீஸ்வரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்? தன்னை காப்பாற்றியது யார் என்று கார்த்திக் அலசி ஆராயத் தொடங்கினார். இறுதியில் சிசிடிவி காட்சிகளை வைத்து ரேவதி தான் தனக்கு உதவி என்று தெரிந்து கொண்டார். இதையடுத்து ரேவதியிடம் கேட்கிறார். அப்போது, ரேவதி, நீங்க என்னுடைய அத்தை பையன் என்று எனக்கு தெரியும். ஒரு நல்ல விஷயத்துக்காக தான் நீங்க பொய் சொல்லி வந்து இருக்கீங்க என்பதையும் நான் தெரிந்து கொண்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்
33
கார்த்திகை தீபம் 2 சீரியல்
பின்னர், கார்த்திக் மீதான காதல் குறித்தும் வெளிப்படையாக சொல்ல, இதைக் கேட்டு கார்த்திக் ஷாக் ஆகி நிற்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடு. அதில் என்ன நடக்கிறது என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.