இதற்கு முக்கிய காரணம் ரேவதி. அவர், தனது கணவர் கார்த்திக் ராஜாவை காப்பாற்ற, அருகிலுள்ள மருத்துவனைக்கு சென்று அங்கிருந்து அம்மாவிற்கு போன் போட்டு நாங்கள், இந்த மாதிரி மருத்துவமனையிலிருந்து பேசுகிறோம். இங்கு, உங்களது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீங்கள் உடனே புறப்பட்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி, தனது கணவருக்காக உடனே புறப்பட்டுள்ளார். ஆனால், அவரை தடுத்து நிறுத்து எல்லா வேளைகளையும் செய்தார், உடனே மருத்துவமனைக்கு போன் போட்டு கேள் என்றார். சாமுண்டீஸ்வரியும் அதன்படி செய்ய, அது உண்மை என்று தெரியவர உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
அதன் பிறகு கார்த்திக் வந்து அண்ணன்களுடன் இணைந்து பத்திரப்பதிவில் கையெழுத்திட்டு கோயிலை தங்களது பெயரில் மாற்றிக் கொண்டார். கோயில் திரும்ப கிடைத்ததைத் தொடர்ந்து பரமேஸ்வரி ரொம்பவே ஹேப்பி. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.