தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சர்தார் 2 திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். அதேபோல் மார்ஷல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் நடிகர் ஆதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
24
தாமதமாகும் கைதி 2
இதனிடையே நடிகர் கார்த்தி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கைதி 2 திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. இது எல்சியு படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென கைதி 2 படத்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டார் லோகேஷ் கனகராஜ். அவர் அடுத்ததாக கமல் மற்றும் ரஜினிகாந்தை வைத்து கேங்ஸ்டர் படமொன்றை இயக்க கமிட்டாகி உள்ளதால், கைதி 2 படம் தாமதமாகி இருக்கிறது.
34
கார்த்தியின் அடுத்த படம் என்ன?
இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கைதி 2 படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த மொத்த கால்ஷீட்டையும் தற்போது சுந்தர் சி-யிடம் கொடுத்துள்ளாராம் கார்த்தி. அவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் முதல் படம் இதுவாகும். தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் பிசியாக உள்ள சுந்தர் சி அப்படத்தை முடித்ததும் கார்த்தி பட ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி வருகிற டிசம்பர் மாதம் கார்த்தி - சுந்தர் சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படத்தை இயக்கி முடித்ததும் கைதி 2 பட ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ். நடிகர் கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய படமாக கைதி 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தில் சூர்யா, கமல் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கைதி 2 திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.