
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் (MCU) மற்றும் டிசி எக்ஸ்டெண்டட் யுனிவர்ஸ் (DCEU) மூலம் சினிமா யுனிவெர்ஸ் தற்போதைய தலைமுறையில் பிரபலமடைந்திருக்கலாம், ஆனால் சினிமா யுனிவெர்ஸின் வரலாறு நீண்ட நெடியது. ஆம். 1930கள் மற்றும் 40களில், ஃபிராங்கண்ஸ்டைன் மற்றும் தி மம்மி போன்ற திரைப்படங்களைக் கொண்டு கிராஸ்ஓவர் யுனிவெர்ஸை உருவாக்கப்பட்டது, அவை கூட்டாக யுனிவர்சல் மான்ஸ்டர்ஸ் என்று அழைக்கப்பட்டன.
இந்திய சினிமாவை பொறுத்தவரை யுனிவெர்ஸ் என்ற கான்செப்ட் புதிது என்றாலும், படிப்படியாக சில யுனிவர்ஸ் உருவாகின. பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டியின் போலீஸ் யுனிவெர்ஸ், யாஷ்ராஜ் ஸ்பை யுனிவர்ஸ் போன்றவற்ற உதாரணமாக சொல்லலாம்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் லோகேஷ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான விக்ரம் படத்திற்கு பிறகு LCU என்று அழைக்கப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் தான் ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்தது.. கைதி விக்ரம் படத்தை இணைத்து LCU என்ற யுனிவெர்ஸ் உருவான நிலையில், தற்போது சமீபத்தில் வெளியான லியோ படமும் LCU-வில் இணைந்துள்ளது. ஆனால் லியோவின் LCU கனெக்ஷன் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.
லியோ படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், ஜென்ரல் ஆடியன்ஸ் பலரும் LCUவில் இந்த படம் வலுக்கட்டாயமாக திணக்கப்பட்டது போல் உள்ளதாக விமர்சித்து வருகின்றனர். போதைப்பொருள் வியாபாரம், ,இரவு நேர சேசிங் காட்சிகள் மற்றும் மிரட்டும் பின்னணி இசை என லியோ படம், LCU படங்களின் வழக்கமான படங்களை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இருப்பினும், பார்வையாளர்கள் லியோவில் இடம்பெற்றுள்ள LCU கேரக்டர்களை ரசிக்கவில்லை. உதாராணமாக மரியம் ஜார்ஜ், மாயா கிருஷ்னன் ஆகியோர் லியோவில் கேமியோவாக நடித்துள்ளனர். ஆனால் லியோ படத்தில் அவர்களின் இருப்பு கதைக்கு வலு சேர்க்கவில்லை என்றும், முந்தைய படங்களுடனான இணைப்பு லியோவில் கட்டாயப்படுத்தப்பட்ட விஷயமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.
லியோவில் பார்த்திபனின் வீட்டுக்கு காவலுக்கு வரும் நெப்போலியன், பார்த்திபனின் காஃபி ஷாப்பை பார்வையிடும் மாயா கிருஷ்ணன், விக்ரமின் உளவாளிகள் குழுவில் சேர்ந்தது, படத்தின் இறுதியில், விக்ரமிடமிருந்து (கமல்ஹாசன்) பார்த்திக்கு வரும் செல்ஃபோன் அழைப்பு ஆகியவை மட்டுமே LCUக்கான இணைப்புகளாக இருந்தன.
ஆனால் விக்ரம் படத்தில் சூர்யா நடித்தது போல் கமல்ஹாசனும் ஒரு கேமியோவில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. எனவே லியோவில் LCU-வில் இடம்பெற்றாலும் அது ரசிகர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாகவே லியோ - LCU கனெக்ஷன் தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதனிடையே லியோ குறித்த மற்றொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. கைதி படத்தில் தில்லி என்ற கேரக்டரில் நடித்திருந்த கார்த்தியை லியோ படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது, ஆனால் விஜய் அதற்கு மறுத்துவிட்டாராம். அதன் பிறகு தான் மன்சூர் அலிகான் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்று ஒரு தகவல் வலம் வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.