தமிழ் சினிமாவில் பல்வேறு மாஸ்டர்பீஸ் படங்களை கொடுத்தவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் அதிரி புதிரியான வெற்றியை பெற்றதால், அப்படம் ரிலீஸ் ஆன உடனே தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார் மணிரத்னம். அதன்படி அவர் இயக்க உள்ள அடுத்த படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
24
Kamal, maniratnam
மணிரத்னமும், கமல்ஹாசனும் ஏற்கனவே நாயகன் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளனர். அந்த கூட்டணி தற்போது 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இது கமல்ஹாசனின் 234-வது படம் என்பதால், இப்படத்தை தற்காலிகமாக KH234 என அழைத்து வருகின்றனர். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் எந்தவித அப்டேட்டும் வெளியிடாமல் இருந்த படக்குழு தற்போது ஒருவழியாக அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கான புரோமோ ஷூட் ஒன்று சென்னையில் நடைபெற்று வருவதாகவும், அதனை தனது பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கமல்ஹாசனே பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அறிவித்தார்.
44
Nayanthara
இந்த நிலையில், தற்போது அப்படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட்டும் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகை நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் அனைத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்ட நயன்தாரா, கமலுடன் மட்டும் நடிக்காமல் இருந்து வந்தார். இப்படத்தின் மூலம் அது நிறைவேற உள்ளது. அதோடு மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படமாகவும் இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.