முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக, லெஜெண்ட் சரவணன் தயாரித்து நடித்த 'தி லெஜெண்ட்' திரைப்படம், ஜூலை 28 ஆம் தேதி வெளியான நிலையில், தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. அதே நேரம் இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சரவணன் அருள் கூறி இருந்தாலும், கதையை சொதப்பியது தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்தது.
இவர் முதல் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இனிமேல் கதையை மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால்... சிறு இடைவெளிக்கு பின்பே மீண்டும் சரவணன் அருள் நடிப்பார் என கூறப்படுகிறது.
தற்போது விஜய்யின் வாரிசு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி படு வைரலாகி வரும் நிலையில், தளபதிக்கே டஃப் கொடுக்கும் விதமாக இந்த புகைப்படத்தை லெஜெண்ட் சரவணன் வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது.