
தமிழ் சினிமாவை எத்தனையோ காமெடி நடிகர்கள் கடந்து சென்றாலும், ஒரு சிலர் மட்டுமே முன்னணி இடத்தை பிடிக்கின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் சின்ன கலைவாணர் என பெயர் எடுத்தவர் தான் 'விவேக்'. வடிவேலு, செந்தில், கவுண்டமணி போன்ற நடிகர்களின் காமெடிகள் ரசிகர்களை சிரிக்க மட்டுமே வைக்கும். ஆனால் விவேக்கின் காமெடி ரசிகர்களை சிந்திக்கவும் தூண்டியது.
தன்னுடைய பல காமெடிகளில் மனித வாழ்க்கையின் எதார்தத்தையும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் தான் விவேக். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான, 'மனதில் உறுதி வேண்டும்' என்கிற திரைப்படத்தின் மூலம், சினிமாவில் நடிகராக அறிமுகமான விவேக், புது புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல், கேளடி கண்மணி, நண்பர்கள் உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
நடிகர் வடிவேலு, தான் முடிவு செய்யும் நடிகர்கள் தான் தன்னுடைய படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கும் நிலையில்... விவேக் அவருக்கு அப்படியே ஆப்போசிட். இயக்குனர் முடிவுக்கு மதிப்பு கொடுப்பவர். அதே போல் தன்னுடன் நடிக்கும் பிரபலங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டும் என்றால் ஓடி வந்து தன்னால் முடிந்ததை செய்பவர். இவர் மூலம் பலர் உதவி பெற்றுள்ளனர். இதனை சில பிரபலங்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
அப்துல் கலாமின் இலட்சியத்தை நிறைவேற்றும் விதமாக 1 கோடி மரங்கள் நடவேண்டும் என்பதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்த நடிகர் விவேக் அந்த லட்சம் நினைவேறுவதற்கு முன்பே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் இறந்து 3 வருடங்கள் ஆகியும் இவரை பற்றிய நினைவுகள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்கவில்லை.
ரஜினிகாந்தை சந்தித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்! தலைவர் கொடுத்த பரிசு; என்ன தெரியுமா?
இந்நிலையில், நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், முதல் முறையாக தங்களின் ட்வின் குழந்தைகள் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் விவேக் அருட்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் இவர்களை தொடர்ந்து விவேக் - அருள்செல்வி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இவர்களை பற்றி தான், அருள்செல்வி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விவேக்கின் மூத்த மகள் பெயர் அம்ரிதா நந்தினி இவர் ஒரு ஆர்டிடெக்காக உள்ளாராம். இரண்டாவது மகள் தேஜஸ்வனி இவருக்கு தான் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. பெங்களூரில் வசித்து வரும் இவர் Law படித்து வருகிறார். விவேக்கின் மருமகன் அமேசான் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளதாகவும் அவர் பெயர் பரத் என்றும் தெரிவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து மூன்றாவதாக பிறந்தவர் தான் பிரசன்னா. இவர் உடல்நட குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 2015-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
'தெறி' கலெக்ஷனை நெருங்க முடியல; தளபதியிடம் பலத்த அடிவாங்கிய 'பேபி ஜான்' முதல் நாள் வசூல்!
இவர் மறைவுக்கு பின்னர், விவேக் - அருள் செல்வி தம்பதிகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இவர்களின் பெயர் பிரஷாந்தினி மற்றும் பிரார்த்தனா என தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் தற்போது 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்களாம். 2017-ஆம் ஆண்டு பிறந்த இவர்களுக்கு தற்போது 7 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக்கிற்கு 2 குழந்தைகள் இருக்கும் தகவல் பலருக்கும் இதுவரை தெரியாத நிலையில், இப்போது அருள் செல்வியே 7 வருடங்களுக்கு பின்னர் அறிவித்துள்ளார்.
மேலும் தங்களின் ட்வின் குழந்தைகளுக்கு பெயர் வைத்ததும் மிகவும் சுவாரஸ்யமான கதை என தெரிவித்துள்ள அருள்செல்வி. ஒருமுறை காஞ்சிபுரம் அருகே இருந்த கோ சாலையை பார்வையிட விவேக் சென்றபோது, அங்கிருந்து காஞ்சி காமாட்சியம்மன் கோவில் எவ்வளவு தூரம் என அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார். இங்கிருந்து மிகவும் பக்கம் 15 - 20 நிமிடம் மட்டுமே ஆகும் என கூறியதால், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று, தன் குழந்தைகளுக்கு வைக்க ஆசைப்பட்டு, மனைவி, மற்றும் மகள்கள் கூறிய பெயர்களை எழுதி ஐயரிடம் கொடுத்து அம்மன் காலடியில் இவை அனைத்தையும் குலுக்கி போட்டு இரண்டு சுருள் மட்டும் எனக்கு கொடுங்கள் என விவேக் கூற, அதே போல் ஐயரும் செய்து இரண்டு சுருள் மட்டுமே விவேக்கிடம் கொடுத்துள்ளார். அதில் எழுதப்பட்டிருந்த பெயர் தான் பிரசன்னாயா மற்றும் பிரார்த்தனா ஆகிய பெயர்கள்.
47 வயதில் அப்பாவாகும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குட் நியூஸை கியூட்டாக அறிவித்த சங்கீதா!