சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'எதிர்நீச்சல்' தொடரில் இருந்து தன்னை வேண்டுமென்றே தூக்கி விட்டதாக, இந்த சீரியலின் முதல் பாகத்தில் சீரியலில் நடித்த பிரபலம் ஒருவர் கூறியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீரியல் எதிர்நீச்சல். ஆணாதிக்கத்துக்கு எதிராக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து.வந்தது. தொடர்ந்து TRP-யில் கெத்துக்காட்டிய வந்த இந்த தொடரில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கதாபாத்திரம் சூழ்நிலை காரணமாக மாற்றப்பட, அதிரடியாக இந்த சீரியல் சறுக்கலை சந்திக்க துவங்கியது.
25
Ethirneechal Serial First Part Ended
அதாவது திருச்செல்வம் இயக்கி வந்த இந்த தொடரில், ஆதிமுத்து குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், எதிர்நீச்சல் தொடரின் டப்பிங் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த சீரியல் குழுவினரையும், உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய மறைவுக்கு பின்னர், ஆதி முத்து குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. பின்னர் பிரபல நடிகரும் - எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பின்னர் ஏற்றுக்கொண்டனர்.
மாரிமுத்துவுக்கு கிடைத்த அங்கீகாரமும், இடமும் வேல ராமமூர்த்திக்கு கிடைக்காமல் போனது. மேலும் சீரியலை டிஆர்பிக்காக பல கோணங்களில் இயக்குனர் இழுத்து சென்ற நிலையில், டி ஆர் பி சரசரவென சரிவை சந்திக்க நேர்ந்தது. எனவே சன் டிவி தரப்பில் இருந்து வேறு ஒரு நேரத்திற்கு சீரியலை மாற்றிக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் திருச்செல்வம்... அதிரடியாக எதிர்நீச்சல் டு தொடரை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாகவும், கூடிய விரைவில் இரண்டாம் பாகம் துவங்கும் என அறிவித்தார்.
45
Thara Ansari Changed
அதன்படி இந்த அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள், சீரியல் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வந்தது. இதில் முதல் பாகத்தில் இடம் பெற்ற பிரபலங்கள் சிலர் மீண்டும் நடித்தாலும், ஜனனி, தாரா, ஐஸ்வர்யாவாக நடித்த குழந்தைகள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து அண்மையில் நந்தினியின் குழந்தையாக தாராவாக கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை தன்னை திருச்செல்வம் அங்கிள் வேண்டுமென்றே இந்த தொடரில் இருந்து நீக்கிவிட்டதாக கூறியதாக ஒரு பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் எதிர்நீச்சல் 2 சீரியலில் மீண்டும் நான் நடிக்க வேண்டும் என அன்சாரி அழுது கேட்டும் கூட இயக்குனர் திருச்செல்வம் மனம் இறங்காமல் இவரை மாற்றிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இது உண்மையிலேயே அன்சாரி போட்ட பதிவா? அல்லது அவருடைய பெயரில் யாரேனும் சமூக வலைதளத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று போட்ட பதிவா? என்பது தெரியவில்லை.