புத்தாண்டு ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?

First Published | Dec 26, 2024, 2:27 PM IST

OTT Release Movies : 2024-ம் ஆண்டின் கடைசி வாரம் ஓடிடி தளங்களில் என்னென்ன படங்களும் வெப் தொடர்களும் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

OTT Release Movies

தியேட்டர்களில் ரிலீசாகும் படங்களுக்கு இணையாக ஓடிடி தளாங்களில் வெளியாகும் படங்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் முன்னணி நட்சத்திரங்களே நேரடியாக ஓடிடி தளங்களுக்காக படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில், 2024-ம் ஆண்டின் கடைசி வாரமான இதில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.

Squid Game 2

ஸ்குவிட் கேம் 2

நெட்பிளிக்ஸில் வெளியாகி சக்கைப்போடு போட்ட வெப் தொடர்களில் ஸ்குவிட் கேமும் ஒன்று. கொரிய தொடரான இதற்கு உலகமெங்கும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஸ்குவிட் கேம் தொடரின் 2வது சீசன் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த வெப் தொடர் ரிலீஸ் ஆனது. முதல் சீசனை போல் ஸ்குவிட் கேம் இரண்டாவது சீசனுக்கும் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Sorgavaasal

சொர்க்கவாசல்

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சென்னை புழல் சிறையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சொர்க்கவாசன். இப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் சானியா ஐயப்பன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் மாத இறுதியில் திரைக்கு வந்த இப்படம் டிசம்பர் 27-ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள்... 2024-ல் அதிக IMDb ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் படங்கள்

andhagan

அந்தகன்

டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் நாயகனாக நடித்த படம் அந்தகன். இப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் இயக்கி இருந்தார். இப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், பூவையார், ஊர்வசி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்து வெற்றிநடைபோட்ட அந்தகன் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் டிசம்பர் 27-ந் தேதி வெளியாக உள்ளது.

Jolly o gymkhana

ஜாலியோ ஜிம்கானா

பிரபுதேவா ஹீரோவாக நடித்த படம் ஜாலியோ ஜிம்கானா. இப்படத்தில் பிரபுதேவா ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார். மேலும் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்திருந்த இப்படம் டிசம்பர் 27-ந் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆக உள்ளது. இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி இருந்தார்.

Other Language Movies

மற்ற மொழி படங்கள்

கன்னடத்தில் சிவராஜ்குமாரின் பைரதி ரனங்கள் படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும், மலையாளத்தில் தானரா மற்றும் மடனோல்சவம் ஆகிய படங்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆக உள்ளன. அதேபோல் இந்தியில் லைலா மஜ்னு மற்றும் புல் புலையா 3 ஆகிய படங்கள் நெட்பிளிக்ஸிலும், பார்ட்டி டில் டை அமேசான் பிரைமிலும், டாக்டர்ஸ் என்கிற வெப் தொடர் ஜியோ சினிமாவிலும் டிசம்பர் 27ந் தேதி முதல் ஸ்டிரீம் ஆக உள்ளது. 

இதையும் படியுங்கள்... சிங்கத்திடம் சரண்டர் ஆன வெற்றி; வசூலில் விடுதலை 2-வை ஓவர்டேக் பண்ணிய முஃபாசா!

Latest Videos

click me!