ரஜினிகாந்தை சந்தித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்! தலைவர் கொடுத்த பரிசு; என்ன தெரியுமா?

Published : Dec 26, 2024, 01:34 PM IST

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற, குகேஷ் நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.  

PREV
14
 ரஜினிகாந்தை சந்தித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்! தலைவர் கொடுத்த பரிசு; என்ன தெரியுமா?
World Champion Gukesh

சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (FIDE World Championship 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ், சீனாவை சேர்ந்த டிங் லிரென் என்பவரை ஃபைலனில் எதிர்கொண்டு இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். தமிழகத்தை சேர்ந்த குகேஷின் சாதனையை இந்தியர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடிய நிலையில், விமான நிலையத்திலேயே குகேஷுக்கு  கொடுக்கப்பட்டது.
 

24
Chief Minister MK Stalin

அதே போல் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் குகேஷை நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குகேஷின் வெற்றியை பாராட்டி அவருக்கு ரூ.5 கோடி பரிசு தொகையும் வழங்கினார். தமிழக இளம் விளையாட்டு வீரர்களுக்கான ரோல் மாடலாக மாறியுள்ள குகேஷை அழைத்து பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

'தெறி' கலெக்ஷனை நெருங்க முடியல; தளபதியிடம் பலத்த அடிவாங்கிய 'பேபி ஜான்' முதல் நாள் வசூல்!

34
Sivakarthikeyan meet Gukesh

அந்த வகையில், குகேஷ்.. நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து வாழ்த்து பெற்றார். குகேஷுடன் அவரின் பெற்றோர் மற்றும் சகோதரரும் உடன் இருந்தனர். குகேஷுக்கு சிவகார்த்திகேயன் வாட்ச் ஒன்றையும் பரிசாக கொடுத்து சிறப்பித்தார். இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது மற்றொரு பிரபலத்தை சந்தித்துள்ளார்.
 

44
Rajinikanth

அவர் வேறு யாரும் அல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தான். பெற்றோருடன் குகேஷ் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ள நிலையில், ரஜினிகாந்த் Paramahansa Yogananda எழுதிய ஆட்டோ பயோகிராபி ஆப் ஏ யோகி என்கிற புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த சில தினங்களாக ஜெய்ப்பூரில் இருந்த நிலையில், தமிழகம் வந்த கையேடு குகேஷை அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

47 வயதில் அப்பாவாகும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குட் நியூஸை கியூட்டாக அறிவித்த சங்கீதா!

Read more Photos on
click me!

Recommended Stories