Bigg Boss Tamil season 8
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று அன்பை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முதல் நாளில் தீபக்கின் மனைவி சிவரஞ்சனி மற்றும் மகன் வந்திருந்தனர். பின்னர் மஞ்சரி குடும்பத்தினர் வந்தனர், அடுத்ததாக ரயான் மற்றும் விஷால் குடும்பத்தினர் வந்திருந்தனர்.
Bigg Boss Freeze Task
இரண்டாம் நாளில் பவித்ரா, ராணவ், செளந்தர்யா மற்றும் அன்ஷிதாவின் குடும்பத்தார் வந்திருந்தனர். இதில் மிகவும் ஹைலைட்டாக இருந்தது செளந்தர்யா பேமிலியின் எண்ட்ரி தான். மற்ற போட்டியாளர்களின் வீட்டார் வரும் போது யார் மீதாவது முரண்பாடு இருக்கா என கேட்டதற்கு ஒவ்வொரு போட்டியாளரின் பெயரை சொல்லினார்கள். ஆனால் செளந்தர்யாவின் பெற்றோர் தங்கள் மகள் மீது தான் முரண்பாடு இருப்பதாக கூறி ட்விஸ்ட் கொடுத்தனர்.
இதையும் படியுங்கள்... உண்மையா காதலிச்சேன்; ஆனா விஷால் இப்படி பண்ணுவான்னு நினைக்கல - ஃபீலிங்ஸை கொட்டிய தர்ஷிகா
Vishal Family
பின்னர் மூன்றாம் நாளான இன்று முதலில் ஜெஃப்ரியின் அம்மா மற்றும் அப்பா காலையிலேயே எண்ட்ரி கொடுத்தனர். அடுத்ததாக அருண் பிரசாத்தின் பெற்றோர் வந்தனர். மூன்றாவதாக முத்துக்குமரனின் பேமிலி வந்தது. இறுதியாக ஜாக்குலினின் தாய் வருகை தந்திருந்தார். அனைவரும் தங்கள் குடும்பத்தாரை பார்த்த குஷியில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு ப்ரீஸ் டாஸ்க்கில் செம ட்விஸ்ட் ஒன்றை பிக் பாஸ் வைத்திருக்கிறாராம்.
Archana Ravichandran
அதன்படி ப்ரீஸ் டாஸ்க்கில் நாளை உள்ளே உள்ள போட்டியாளர்களின் நண்பர்கள் எண்ட்ரி கொடுக்க உள்ளார்களாம். அந்த வகையில் அருண் பிரசாத்தின் காதலி அர்ச்சனாவும் நாளை பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அவர் உள்ளே வந்தால் முத்துக்குமரன், மஞ்சரி ஆகியோருக்கு செம டோஸ் கொடுப்பார் என கூறப்படுகிறது. இதுமட்டும் நடந்தால் இந்தவாரம் டிஆர்பி எகிறிவிடும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... கண்ணீரில் மூழ்கிய விஜே விஷால்! பிக்பாஸ் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்ட தந்தை!