
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் மிகவும் பிரபலமானவர் லலித் மோடி. அவர் தற்போது மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் சுஸ்மிதாவின் முன்னாள் காதலர்கள் குறித்த லிஸ்ட் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இளம் மாடலாக இருந்த சுஷ்மிதாசன் கடந்த 2019 ஆம் ஆண்டு தன் துறையை சார்ந்த நடிகரான ரோஹுமான் என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். அவரின் மகள்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் சுஷ்மா. பின்னர் 2021 ஆம் ஆண்டில் இந்த ஜோடி தங்கள் பிரிவை அறிவித்து நல்ல நண்பராக இனி இருக்கப் போவதாக தெரிவித்தனர்.
மன்சூன் வெட்டிங், டர்னா ஸரூரி ஹை உள்ளிட்ட படங்களில் தோன்றிய நடிகர் ரந்தீப் ஹூடாவுடன் 3 ஆண்டுகள் டேட்டிங் செய்தார். தங்களது காதலை சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்திய இருவரும் மிக குறுகிய காலம் மட்டுமே காதல் கொண்ட நிலையில் நடிகர் தங்கள் காதல் முறிவை நேர்காணல் மூலம் அறிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு...Pratap Pothen Funeral : நடிகர் பிரதாப் போத்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது
தஸ்தக் இயக்குனர் விக்ரம் உடனான சுஷ்மிதா செட்டின் உறவு அந்த படப்பிடிப்பின் போது துவங்கியது. ஏற்கனவே திருமணம் ஆன விக்ரம் பேட் சுஷ்மிதாவுடன் டேட்டிங் செய்வது குறித்து அப்போது பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர்கள் தங்கள் உறவை அறிவித்த உடனேயே பிரிந்து விட்டனர்.
மற்றொரு இயக்குனருடன் சுஸ்மிதாவின் காதல் மலர்ந்தது. துல்ஹா மில் கயா என்னும் படத்தின் இயக்குனரான முடாஸ்ஸர் அஜீஸ் உடன் காதல் ஏற்பட்டது குறித்து சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். ஒன்றாக இருந்த இருவரும் சிறிது காலத்தில் பிரிந்து விட்டனர். தற்போது இந்த இணயக்குனர் வலிமை நாயகி ஹீமா குரேஷியுடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...என்னது..ஓசியில் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்கி? வெளியான பரபரப்பு தகவல்!
சீமா கானின் சகோதரரான பூந்தி சஜ்தேவும் பல பொது இடங்களில் தென்பட்ட சுஸ்மிதா அவருடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சுஷ்மிதா சென் பின்னர் அதை வெறும் வதந்தி என்று நிராகரித்தார்.
சுஷ்மிதா சென்னிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசீம் அக்ரம் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோ படப்பின் போது இவர்களது காதல் உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் தாங்கள் வெறும் நண்பர்கள் மட்டும்தான் என சுஷ்மிதா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...மீண்டும் சின்னத்திரை ரியாலிட்டியில் ஓவியா..போட்டோவை பார்த்து குஷியான ஆர்மி..
ஹாட்மெயிலின் நிறுவனர் ஷபீர் பாட்டியா உடன் சுஷ்மிதா உறவில் இருப்பதாக கூறப்பட்டது. சிறுது காலத்தில் சுஸ்மிதா அந்த உறவை முறித்துக் கொண்டதாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டது.
மிஸ் யுனிவர்ஸ் இம்தியாஸ் காத்ரி என்ற இளம் தொழிலதிபருடன் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. ஒரு ரேம்ப் வார்க்கின் போது இருவரும் சந்தித்து அங்கு காதல் உறவில் விழுந்ததாகவும் பேசப்பட்டது. இருப்பினும் அவர்கள் நண்பர்கள் மட்டுமே என இம்தியாஸ் விளக்கம் அளித்து இருந்தார்.
ஹோட்டல் அதிபர் ஒருவருடன் சுஷ்மிதா காதலில் இருந்ததாகவும் கூறப்பட்டது, சஞ்சய் நரங்கை என்பவர் குறித்து எழுதிய சுஷ்மிதா "காதலில் இருப்பது ஒன்றுதான் அன்பாக இருப்பது தான் சஞ்சய் முதலில் முன்மொழிந்தார் அதனால் தான் சரி என கூறியதாக குறிப்பிட்டு பிரிவை அறிவித்தார்.
ரித்திக் பாசின் என்பவருடன் ஜாகீர் கான் - சகாரிகா காட்கே திருமணத்தில் தோன்றிய சுஸ்மிதா அவருடன் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. 4 ஆண்டு வலுவான காதலுக்கு பின்னர் இருவரும் பிரிந்தனர்.