பாக்ஸ் ஆபிஸில் இரவின் நிழலுக்கு கிடைத்த அமோக வரவேற்பு.... முதல் நாள் கலெக்‌ஷன் மட்டும் இவ்வளவா?

Published : Jul 16, 2022, 12:35 PM IST

Iravin Nizhal Day 1 collection : பார்த்திபன் இயக்கத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இரவின் நிழல் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

PREV
14
பாக்ஸ் ஆபிஸில் இரவின் நிழலுக்கு கிடைத்த அமோக வரவேற்பு.... முதல் நாள் கலெக்‌ஷன் மட்டும் இவ்வளவா?

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்கியுள்ள படம் இரவின் நிழல். ஒத்த செருப்பு படத்தைப் போல் இப்படத்திலும் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார் பார்த்திபன். அதன்படி, இப்படத்தை ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளார். அதுவும் Non Linear முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பம்சம்.

24

படத்தை வெற்றிகரகமாக அவர் ஒரே ஷாட்டில் இயக்கி முடித்துவிட்டாலும், இப்படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருந்த பார்த்திபனுக்கு ரசிகர்களும் கிரீன் சிக்னலை காட்டி உள்ளனர். நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்... இரவின் நிழல் முதல் Non Linear சிங்கிள் ஷாட் படம்னு பார்த்திபன் சொல்வது பொய் - புயலை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

34

பொதுவாக முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் போடப்படும், அதேபோல் இரவின் நிழல் படத்துக்கும் நேற்று 4 மணி காட்சி திரையிடப்பட்டது. இதற்கு வந்த கூட்டத்தை பார்த்த நடிகர் பார்த்திபனும், இரவின் நிழல் படக்குழுவும் வியந்துபோயினர். மகிழ்ச்சியில் பார்த்திபனுக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.

44

இந்நிலையில், இரவின் நிழல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதனால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஒரே ஷாட்டில் எடுத்த படம்... பார்த்திபனின் விடா முயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்ததா? - இரவின் நிழல் விமர்சனம்

click me!

Recommended Stories