கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்றிருந்தார் ஓவியா, கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த ஷோவில் பிந்து மாதவி, ரைசா வில்சன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அமைதியாகவும் வசீகரமாகவும் காணப்பட்ட ஓவியா ஆரவுடன் ஏற்பட்ட காதலுக்கு பிறகு அவருடைய நடவடிக்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிதாபமான பெண்ணாக பார்க்கப்பட்ட ஓவியா இறுதியில் தனது காதலை ஏற்றுக்கொள்ள தற்கொலை வரை சென்று விட்டார். இதனால் ஓவியா ஆர்மி உருவானது. அவருக்காக குரல் கொடுத்து வந்தது.
26
oviya
தற்கொலை முயற்சி செய்ததால் வெளியேற்றப்பட்ட ஓவியா நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பிறகு ஆரவுடனான காதல் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. தற்போது ஆரவிற்கு திருமணமும் முடிந்து விட்டது. முன்னதாக தமிழில் களவாணி படம் மூலம் அறிமுகமான ஓவியாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விமல் நாயகனாக நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் சிறந்த படமாக விளங்கியது. கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவியாக இரட்டைச் சடையுடன் ஓவியா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.
களவாணி வெற்றியை தொடர்ந்து ஜீவனின் அமரா, வேங்கை, முகம் நீ அகம் நான், மற்றும் முத்துக்கு முத்தாக உட்பட பல சிறிய பட்ஜெட் படங்களில் ஓவியா ஒப்பந்தமானார். பிக் பாஸிலிருந்து வெளிவந்த இவருக்கு தெலுங்கிலும் வரவேற்பு கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு இதி நா லவ் ஸ்டோரி என்னும் படத்தில் அறிமுகமான இவர் அதே ஆண்டு சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தில் காமோயோவாக தோன்றினார்.
ரசிகர்களின் வரவேற்பை அடுத்து தனது பாதையை மாற்ற எண்ணிய ஓவியா 90 எம்எல் என்னும் படத்தில் வித்தியாசமான நடித்திருந்தார். புதிய சிகை அலங்காரம், தன் தோற்றம், நடிப்பு என புதிய ஜானரில் சென்றார். ஆனால் இது ஓவியாவிற்கு கை கொடுக்கவில்லை. பின்னர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். மீண்டும் களவாணி 2 படத்தில் நாயகியானார். தற்போது ராஜ பீமா, சம்பவம் என இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார் ஓவியா.
56
oviya
இந்நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கு ஓவியா என்ட்ரி கொடுப்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கே இருக்கிறார் ஓவியா. நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. அப்போது நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் பாபா பாஸ்கர், நடிகை சினேகா, சங்கீதா ஆகியோருடன் ஓவியா இணைந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட்டில் ஓவியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக பங்கேற்கவில்லை என்பதால் ஓவிய ஆர்மி மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இந்த சூழலில் இவர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க உள்ளது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.