திருமணத்தின் வீடியோக்களை ஸ்டீரிமிங் செய்யும் உரிமையை 25 கோடி ரூபாய் தந்தால் தாங்கள் தருவதாக நயன்தாரா பேசியுள்ளனர். இதற்கு அந்த நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது
நானும் ரவுடிதான் படத்தில் துவங்கிய நயன்தாரா விக்னேஷ் காதல் தருணம் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி திருமணத்தில் முடிந்தது. ஏழு வருட காதலை திருமண பந்தமாக இந்த நட்சத்திர ஜோடி மாற்றி உள்ளது.
27
Nayanthara vignesh shivan wedding photos
தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார், பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவனின் திருமணம் சென்ற மாதம் கோலாகலமாக நடைபெற்றது. கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நட்சத்திரங்கள் பலரும் ஜொலித்திருந்தனர்.
ரஜினிகாந்த், மணிரத்தினம், ஷாருக்கான், அட்லி, விஜய் சேதுபதி, சூர்யா என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த திருமணத்தின் செலவுகள் மற்றும் விருந்து பட்டியல் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வந்தன.
47
Nayanthara vignesh shivan wedding photos
இதற்கிடையே தங்களது திருமண போட்டோக்கள் வீடியோவை பிரபல ஓடிடி நிறுவனத்திடம் நயன்தாரா விக்னேஷ் சிவன் பெற்றுவிட்டதாகவும் விலை பேசியுள்ளதாகவும் .அதனால் தான் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டது. பின்னர் அந்த நிறுவனம் பின் வாங்கியாதல் தங்களது வலைதள பக்கம் மூலம் போட்டோக்களை ஷேர் செய்கின்றனர் என்றும் கூறப்பட்டது.
அந்த புகைப்படங்களும் தற்போது செம வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்கிற புதிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது. அதாவது இவர்களது திருமணத்திற்கு முழுக்க முழுக்க நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தான் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலின் அறைகள் முன்பதிவு, கடற்கரையில் பெரிய கண்ணாடி மாளிகை, திருமணத்தில் வருபவர்களுக்கு தல ரூ. 3500 மதிப்பிலான உணவு, நயன்தாராவிற்கு காஸ்ட்லி மேக்கப், பாதுகாவலர்கள், விக்னேஷ் - நயன்தாராவின் உடை நகைகள் என பல கோடி ரூபாயை நெட்ஃபிலிக்ஸ் செலவு செய்தது என கூறப்படுகிறது.
77
Nayanthara Vignesh shivan wedding
ஆனால் திருமணத்தின் வீடியோக்களை ஸ்டீரிமிங் செய்யும் உரிமையை 25 கோடி ரூபாய் தந்தால் தாங்கள் தருவதாக நயன்தாரா பேசியுள்ளனர். இதற்கு அந்த நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.