மலையாள நடிகையான நயன்தாரா, கடந்த 2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், அடுத்ததாக ரஜினியுடன் சந்திரமுகி, விஜய்யுடன் சிவகாசி, அஜித்துடன் பில்லா என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.