பெங்காலி நடிகை ஆண்ட்ரிலா சர்மா காலமானார். அவருக்கு வயது 24, கடந்த 20 நாட்களாக ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் சுமார் 12:59 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்றிரவு அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் CPR கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனளிக்காததால் அவர் இன்று உயிரிழந்தார்.
நடிகை ஆண்ட்ரிலா சர்மா ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் ஆவார். அதேபோல் இந்த முறையும் கோமா நிலையில் இருந்து அவர் மீண்டு வந்துவிடுவார் என குடும்பத்தினரும், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எதிர்பார்ப்பெல்லாம் வீணாய் போனது.