விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியிட ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறுபுறம் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்கிற குழப்பமும் நீடித்து வருகிறது. ஏனெனில் இப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்க முடியாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
குறிப்பாக நடிகர் சந்தானம், இயக்குனர் லிங்குசாமி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் விஜய்க்கு ஆதரவுக் குரல் எழுப்பினர். இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து நடிகரும், எம்.எல்.ஏ.வும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக பேசி உள்ளார்.
கட்டா குஸ்தி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட உதயநிதியிடம் வாரிசு பிரச்சனைக்காக பேச்சுவார்த்தை நடத்துவீர்களா அல்லது அங்கு ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தெலுங்கு திரையுலகில் போய் நான் எப்படி பேச முடியும் என கூறிவிட்டு இதில் தான் தலையிட முடியாது என்பதை சூசகமாக சொல்லிச் சென்றார் உதயநிதி.
இதையும் படியுங்கள்... ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்... டுவிட்டரில் டிரெண்டாகும் பனையூர் பிரியாணி