ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்... டுவிட்டரில் டிரெண்டாகும் பனையூர் பிரியாணி

First Published | Nov 20, 2022, 2:02 PM IST

விஜய் ரசிகர்களுக்காக பனையூரில் தயாராகும் பிரியாணி குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், டுவிட்டரில் பனையூர் பிரியாணி என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கோலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்கிற ரேஞ்சுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் விஜய், தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில காரணங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளாக ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின் இன்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... அட்ராசக்க... தளபதி 67-னும் LCU படம் தானாம் - மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபல நடிகர்... குஷியான விஜய் ரசிகர்கள்

Tap to resize

இதற்காக காலை முதலே நடிகர் விஜய்யை பார்க்க ரசிகர்கள் அலைபோல் திரண்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வைத்து சந்திக்க திட்டமிட்டுள்ளார் விஜய். தன்னை காண வந்துள்ள ரசிகர்களுக்காக சுட சுட பிரியாணி விருந்தும் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார் விஜய்.

ரசிகர்களுக்காக பனையூரில் தயாராகும் பிரியாணி குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், டுவிட்டரில் பனையூர் பிரியாணி என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் நடிகர் விஜய்யை கிண்டலடித்து ஏராளமான பதிவுகள் பதிவிடப்பட்டு வருவதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அருண் விஜய் நடித்த தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் விஜய்யை கிண்டலடித்து ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும், அந்தக் காட்சியை தற்போது வைரலாக்கி வருகின்றனர். இதனால் விஜய்யின் பிரியாணி விருந்து, பனையூர் பிரியாணி என்கிற பெயரில் ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.

இதையும் படியுங்கள்... விஜய் டிவி பிரபலத்தை ரகசிய திருமணம் செய்துகொண்டார் குக் வித் கோமாளி ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்

Latest Videos

click me!