அட்ராசக்க... தளபதி 67-னும் LCU படம் தானாம் - மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபல நடிகர்... குஷியான விஜய் ரசிகர்கள்

Published : Nov 20, 2022, 01:20 PM IST

தளபதி 67 திரைப்படம் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் எனப்படும் LCU-வில் இடம்பெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை பிரபல நடிகர் உறுதி செய்துள்ளார்.

PREV
14
அட்ராசக்க... தளபதி 67-னும் LCU படம் தானாம் - மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபல நடிகர்... குஷியான விஜய் ரசிகர்கள்

வாரிசு படத்திற்கு பின் நடிகர் விஜய் நடிக்க உள்ள 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 67 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24

தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் வில்லனாக நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன. சமீபத்தில் கூட இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் கெஸ்ட்ரோலில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது.

இதையும் படியுங்கள்... விக்ரம் பட ரோலெக்ஸ் ரேஞ்சுக்கு... தளபதி 67-லும் இடம்பெறும் மாஸான கேரக்டர் - அதில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

34

இதைவைத்து பார்க்கும் போது தளபதி 67 திரைப்படம் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் எனப்படும் LCU-வில் இடம்பெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், கைதி போன்ற படங்களில் நடித்த நடிகர் நரேன், சமீபத்தில் மலையாள பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

44

அதன்படி தளபதி 67 திரைப்படமும் LCU-வில் இடம்பெறும் என அவர் அதில் கூறி உள்ளார். ஆனால் தான் அப்படத்தில் நடிக்க வில்லை என்பதையும் அந்த பேட்டியில் நடிகர் நரேன் உறுதிபட கூறி இருந்தார். இதன்மூலம் தளபதி 67 படத்தில் ரோலெக்ஸ் சூர்யா, டில்லி கார்த்தி ஆகியோரது கதாபாத்திரங்கள் இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்... குஸ்தி வீரனாக கோதாவில் இறங்கிய விஷ்ணு விஷால் - கவனம் ஈர்க்கும் கட்டா குஸ்தி டிரைலர்

Read more Photos on
click me!

Recommended Stories