ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடி... ரத்த தானம் செய்த அருண் விஜய்..!

Published : Nov 19, 2022, 10:24 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் இன்று, தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார்.  

PREV
16
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடி... ரத்த தானம் செய்த அருண் விஜய்..!

தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு... அறிமுகமானாலும், பின்னர் தன்னுடைய திறமையால், சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டுள்ளார் அருண் விஜய்.

26

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக,  இருக்கும் நடிகர் அருண் விஜய் இன்று தன்னுடைய பிறந்த நாளை, உதவும் கரங்கள் ஆதரவற்றவோர் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். 

ரஷிதா பின் சுற்றியதால் கழட்டிவிட்ட ராபர்ட் மாஸ்டர் காதலி! பிக்பாஸ் வீட்டின் உள்ளேயே கொடுத்த அதிர்ச்சி வைத்தியம

36

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது மகன், மகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். குழந்தைகள் முன்பு கேக் வெட்டி அவர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

46

பின்னர் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்... அவர்களுடன் சேர்ந்து மதிய உணவை சாப்பிட்டார். முன்னணி நடிகராக இருந்தும் இவர் மிகவும் எளிமையாக பழகி, சின்னசிறு குழந்தைகளுடன் உணவு அருந்தியது பார்பவர்களையே ஆச்சரியப்படுத்தியது.

முகமெல்லாம் ஊதி போய்.. அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அப்பாஸ்..! என்ன ஆச்சு?
 

56

அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார். 

66

நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், ரத்த தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நம்ப லிஸ்டுலையே இல்லையே.! மீண்டும் மன்மதனாக மாறும் சிம்பு? இரண்டாம் பாகத்திற்கு பக்கா பிளான் போட்ட STR!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories