அந்த ஒரு காரணத்தால் தான் லிப்லாக் காட்சியில் நடிச்சேன்.. ‘இச்’ சர்ச்சைக்கு குட்டிநயன் அனிகாவின் ‘நச்’ விளக்கம்

Published : Feb 15, 2023, 02:06 PM IST

ஓ மை டார்லிங் எனும் மலையாள படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். 

PREV
14
அந்த ஒரு காரணத்தால் தான் லிப்லாக் காட்சியில் நடிச்சேன்.. ‘இச்’ சர்ச்சைக்கு குட்டிநயன் அனிகாவின் ‘நச்’ விளக்கம்

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வந்தார். இவரை தமிழில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் கவுதம் மேனன் தான். அவர் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தார் அனிகா. இவர்கள் இருவருக்கும் இடையேயான தந்தை - மகள் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதால் விஸ்வாசம் படத்திலும் அனிகாவை அஜித்தின் மகளாக நடிக்க வைத்தார் இயக்குனர் சிவா.

24

நடிகை அனிகாவுக்கு தற்போது 18 வயது ஆகிவிட்டதால், அவர் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட பொம்மா. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கப்பேலா எனும் காதல் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் கடந்த பிப்ரவரி 4-ந் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனிகாவும் முதல் படத்திலேயே ஹீரோயினாக வெற்றி கண்டார்.

இதையும் படியுங்கள்... திரையரங்குகளில் இனி அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் ஆப்பு தான்... உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

34

இதற்கு அடுத்தபடியாக அனிகா ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் ஓ மை டார்லிங். மலையாளத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். ரொமாண்டிக் திரைப்படமான இதை ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகவும் வைரல் ஆனது. இதற்கு காரணம் இப்படத்தில் அனிகா ஏராளமான லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சிகள் டிரைலரிலும் இடம்பெற்று இருந்தன. அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர்.

44

இந்நிலையில், லிப்லாக் காட்சியில் நடித்தது குறித்து நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : “ஓ மை டார்லிங் முழுநீள காதல் படம். அதில் முத்தக்காட்சி இடம்பெறுவதை தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும்போதே இந்த காட்சிக்கான முக்கியத்துவத்தையும் இயக்குனர் சொல்லி இருந்தார். கதைக்கு தேவைப்பட்டதால் தான் அதில் நடித்தேன். அந்த காட்சிகளில் துளி அளவு கூட ஆபாசம் இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு அது புரியும்” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் தகராறு; காவல் அதிகாரியின் மகன் மீது கொலை வெறி தாக்குதல்

click me!

Recommended Stories