நடிகை கிருத்தி ஷெட்டிக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது தமிழ் சினிமாவில் தஞ்சமடைந்துள்ளார். அவர் கைவசம் உள்ள தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
'உப்பென்னா' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் கிருத்தி ஷெட்டி. அப்படத்தில் பேபம்மாவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட்டானதால், அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அதன்பின் அவர் நடித்த ஷியாம் சிங்கா ராய், பங்கர்ராஜு தவிர, தி வாரியர், கஸ்டடி, மனமே போன்ற படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. இதுதவிர சூப்பர் 30 படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
25
கோலிவுட்டை மலைபோல் நம்பும் கிருத்தி ஷெட்டி
இப்படி தொடர் தோல்விகளால் டோலிவுட்டில் கிருத்தி ஷெட்டியின் மார்க்கெட் சரிந்தது. இதனால், கடந்த ஆண்டு மலையாளத்தில் 'ஆர்ம்' என்ற படத்தில் அறிமுகமானார். அப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், அவரின் அடுத்த நம்பிக்கை கோலிவுட் தான். தற்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த மூன்று படங்களுமே தாமதமாகி வருகிறது. அநேகமாக அந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு டிசம்பரில் ரிலீஸ் ஆக அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது.
35
வா வாத்தியார்
அதில் முதல் படமாக நடிகர் காந்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இதுதான் கிருத்தியின் கோலிவுட் அறிமுக படமாக இருக்கும்.
இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கிருத்தி ஷெட்டி. இப்படத்தில் சென்சேஷனல் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் இனைந்து தயாரித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வருகிறது.
55
ஜீனி
கிருத்தி ஷெட்டி கைவசம் உள்ள மூன்றாவது படம் ஜீனி. இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி மட்டுமின்றி கல்யாணி பிரியதர்ஷனும் நடித்திருக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜீனி' படப் பாடல் இணையத்தில் வைரலாகி, கிருத்தி ஷெட்டியின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.