ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆன படங்கள் மற்றும் வெப் தொடர்களில் அதிக வியூஸ்களை பெற்ற திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது.
திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பவர்களைவிட ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடுகிறது. இதனால் பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற சிறு பட்ஜெட் படங்களையெல்லாம் ஓடிடியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை மக்கள் மத்தியில் வந்துவிட்டது. இதன் காரணமாக தியேட்டரை போல் ஓடிடியில் வார வாரம் புதுப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளது. அந்த வகையில் அக்டோபர் 6 முதல் 12ந் தேதி வரை ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
24
டாப் 5ல் மதராஸி
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதற்கு 14 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதையடுத்து நான்காம் இடத்தில் மகாவதார் நரசிம்மா திரைப்படம் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு கடந்த வாரத்தில் 15 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் சன் ஆஃப் சர்தார் 2 திரைப்படம் உள்ளது. நெட்பிளிக்ஸில் உள்ள இப்படத்திற்கு 20 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
34
அதிக வியூஸ் அள்ளிய கூலி
இந்த பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த மாதம் ஓடிடியில் வெளியானாலும், ஒரு மாதத்தைக் கடந்தும் அமேசான் பிரைம் வீடியோவில் 26 லட்சம் வியூஸ் அள்ளி உள்ளது. இதையடுத்து முதல் இடத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த வார் 2 திரைப்படம் உள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதற்கு 35 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள் பட்டியலில் அமேசான் பிரைமில் வெளியான சிக்சஸ் சீசன் 2 வெப் தொடர் 14 லட்சம் வியூஸ் உடன் 5ம் இடத்தில் உள்ளது. 15 லட்சம் வியூஸ் உடன் நான்காம் இடத்தில் குருக்ஷேத்ரா என்கிற வெப் தொடர் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. மூன்றாம் இடத்தில் உள்ள தி பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெப் தொடருக்கு நெட்பிளிக்ஸில் 18 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. Search: The Naina Murder Case என்கிற வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் 20 லட்சம் வியூஸ் பெற்று 2ம் இடத்தில் உள்ளது. 25 லட்சம் வியூஸ் உடன் Jamnapaar என்கிற இந்தி வெப் தொடரின் இரண்டாவது சீசன் முதலிடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.