கொட்டுக்காளி முதல் டிமாண்டி காலனி 2 வரை... இந்த வாரம் மட்டும் ஓடிடியில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?

First Published | Sep 26, 2024, 8:06 AM IST

This Week OTT Release Movies : செப்டம்பர் 27-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் என்னென்ன என்பதையும் அது எந்த ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகிறது என்பதையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

OTT Release Movies

கோலிவுட்டில் இந்த வாரம் தியேட்டரில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படம் ரிலீஸ் ஆகிறது. அப்படத்தை பிரேம்குமார் இயக்கி உள்ளார். அதேபோல் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படமும் இந்த வாரம் தான் திரைக்கு வருகிறது. தியேட்டர் ரிலீஸ் ஒருபுறம் இருக்க, இந்த வாரம் ஓடிடியில் நிறைய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள், எந்த ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகின்றன என்பதை பார்க்கலாம்.

Kottukkaali Movie

கொட்டுக்காளி

பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னாபென் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம் கொட்டுக்காளி. இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. வருகிற செப்டம்பர் 27-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கொட்டுக்காளி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.


Demonte Colony 2

டிமாண்டி காலனி 2

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் டிமாண்டி காலனி 2 படமும் ஒன்று. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆகஸ்ட் 15ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட இப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 27-ந் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

Minmini

மின்மினி

சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் புதுமுகங்கள் பலர் நடித்திருந்த படம் தான் மின்மினி. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜா ரகுமான் இசையமைத்து இருந்தார். ஒளிப்பதிவு பணிகளை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டு இருந்தார். இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்த நிலையில், தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. செப்டம்பர் 27 அன்று டெண்ட்கொட்டா ஓடிடியில் மின்மினி ரிலீஸ் ஆகிறது.

suryas saturday

சூர்யாஸ் சாட்டர்டே

நானி நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக ரிலீஸ் ஆன படம் தான் சரிபோதா சனிவாரம். இப்படம் தமிழில் சூர்யாஸ் சாட்டர்டே என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கி இருந்தார். இதில் நனிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த நிலையில், தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. செப்டம்பர் 26-ந் தேதி இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

Blink

பிளிங்க்

மனித எமோஷன்ஸ் மற்றும் சயின்ஸ் ரெண்டையும் கலந்து பார்வையாளர்களை கட்டிப்போடும் ஒரு படமாக பிளின்க் அமைந்துள்ளது. கன்னட படமான இது தற்போது தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் செப்டம்பர் 25-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... இயக்குனர் பாலாவையே கதறி அழ வைத்த... 'வாழை' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Latest Videos

click me!