‘குக்கு வித் கோமாளி 5’ மணிமேகலைக்கு பதிலாக ரக்ஷனுடன் கைகோர்த்த பிரபலம்!!

Published : Sep 25, 2024, 10:38 PM ISTUpdated : Sep 26, 2024, 11:31 AM IST

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை, விலகியதாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது இடத்தை நிரப்ப புதிய கோமாளி ஒருவர் தொகுப்பாளராக அவதாரம் எடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
14
‘குக்கு வித் கோமாளி 5’ மணிமேகலைக்கு பதிலாக ரக்ஷனுடன் கைகோர்த்த பிரபலம்!!
Cook With Comali Season 5

சமையல் நிகழ்ச்சியில் கூட காமெடியை புகுத்தி கலகலப்பாக மாற்றலாம் என்பதை நிரூபித்த நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி'. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், 5-ஆவது சீசன் துவங்குவதால், சிறு தாமதம் ஏற்பட்டது. பல ரசிகர்கள் குக் வித் கோமாளி துவங்குமா? என்று கேள்விகளை முன்வைத்து வந்த நிலையில்... பல பிரச்சனைகளை கடந்து ஒருவழியாக குக் வித் கோமாளி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
 

24
Manimegalai Hosting Cook With Comali

5-ஆவது சீசனில் பல மாற்றங்கள் இருந்தன. கடந்த நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பாளர், இயக்குனர், நிகழ்ச்சியில் இருந்து விளங்கியதோடு மட்டும் இன்றி... இந்த நிகழ்சியின் நடுவரான வெங்கடேஷ் பட்டும் அதிரடியாக வேறு ஒரு சேனலுக்கு தாவினார். எனவே வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மதம்பட்டி ரங்கராஜ் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நடுவராக மாறினார். அதே போல் இந்த முறை  ரக்ஷனுடன் சேர்ந்து, மணிமேகலை 'குக் வித் கோமாளி' நிகழ்சியை தொகுத்து வழங்கினார்.

இயக்குனர் பாலாவையே கதறி அழ வைத்த... 'வாழை' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

34

கடந்த மூன்று மாதமாக, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் செமி ஃபைனல் நடந்த போது, மணிமேகலையிடம் ப்ரியங்கா தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து, மணிமேகலை தொகுத்து வழங்குவது குறித்து அதிக விமர்சனங்களை வைத்ததால், மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில், ப்ரியங்காவின் பெயரைக்குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் காட்டு தீ போல்  பற்றி எறிந்த நிலையில்... பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். அதே போல் இது ஒரு பிராக் நிகழ்ச்சி என சரத் கூறியது விமர்சனங்களுக்கு ஆளானது.
 

44
Puazh is New host

மற்ற குக் வித் கோமாளி போட்டியாளர்கள் அனைவருமே மணிமேகலை மற்றும் ப்ரியங்கா என இருவரையும் விட்டு கொடுக்காமல் பேசியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் புதிய கோமாளி ஒருவர் தான்,ஃபைனலில் தொகுப்பாளராக மாறி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் அல்ல, புகழ் தான். 

குக் வித் கோமாளி மூலம் தன்னுடைய திறமையான காமெடியை வெளிப்படுத்தி, திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வரும் புகழ், தற்போது தொகுப்பாளராகவும் மாறி உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே போல் இவர் தொகுத்து வழங்குவதை பார்க்க குக் வித் கோமாளி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஆர்.பி-யில் டம்மியான ஐந்து முக்கிய சீரியலை அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி!


 

Read more Photos on
click me!

Recommended Stories