எந்த ஒரு சினிமா பில்டப்பும் இல்லாமல், எதார்த்தமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவருக்கு, முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' படமும் விமரிசன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்தடுத்து இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகரும் - அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்ட, 'மாமன்னன்' படத்தை இயக்கினார்.
ஆகவே சிறிய அளவிலான நடிகர் நடிகைகள் மற்றும் எளிமையான பட்ஜெட் இருந்து பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறி வருகின்றது. அதற்கு மாரி செல்வராஜின் வாழை ஒரு சாட்சி. அதுமட்டுமல்ல, கடந்த வாரம் கோலிவுட்டில் வெளியான சில படங்கள், குறைந்த பட்ஜெட்டில், தயாரிப்பாளருக்கு நிறைவான வெற்றியை கொடுத்துள்ளது. அதற்கு காரணம் படத்தின் கதையே.