Published : Sep 25, 2024, 03:32 PM ISTUpdated : Sep 25, 2024, 04:34 PM IST
நடிகர் விஜயகுமாரின் 2-ஆவது மனைவியும், நடிகையுமான, மஞ்சுளா தன்னுடைய மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய நிலையில், அனிதா விஜயகுமாருக்கு நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது. அது எந்த படம்?, என்ன கதாபாத்திரம் என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில், தன்னுடைய 80-வயதிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். இவர் ஏற்கனவே முத்து கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போது, நடிகை மஞ்சுளாவை காதலித்து முதல் மனைவி சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாருக்கு முதல் மனைவி மூலம் 2 மகள் மற்றும் 1 மகன் இருந்த நிலையில், இரண்டாவது மனைவி மஞ்சுளா மூலம் 3 பெண் குழந்தைகள் பிறந்தனர். இவருடைய பிள்ளைகள் 6 பேரில், 5 பேர் நடிகர்கள் தான். அனிதா விஜயகுமார் மட்டுமே மருத்துவத் துறையை தேர்வு செய்து படித்து மருத்துவராக மாறினார்.
26
Vijayakumar Family:
மற்ற பிள்ளைகளான கவிதா விஜயகுமார் கூலி என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்த போதும், அதனை தவிர்த்து விட்டு தன்னுடைய காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதே போல் விஜயகுமாரின் ஒரேமகனான அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். மஞ்சுளா - விஜயகுமாரின் மகள்களான வனிதா விஜயகுமார், பிரீத்தா, ஸ்ரீதேவி, ஆகியோர் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு, பின்னர் திருமணம் ஆகி செட்டில் ஆகினர்.
விஜயகுமாரின் மகள்களை பொறுத்தவரை, திருமணத்திற்கு முன் நடித்தாலும்... திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகி குடும்பம் - குழந்தைகள் என செட்டில் ஆனார்கள். அந்த வகையில், கவிதா விஜயகுமார் திருமணத்திற்கு பின்னர், கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அனிதா விஜயகுமாரும், மருத்துவர் ஆன பின்னர்... மருத்துவரான தன்னுடைய காதலரை திருமணம் செய்து லண்டனில் செட்டில் ஆனார். ஆனால் என்ன தான் வெளிநாட்டில் வசித்தாலும், அனிதாவுக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், சென்னையிலேயே குடியேறினார். மேலும் அருண் விஜய், ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோரும் சென்னையில் தான் உள்ளனர்.
46
Vanitha Vijayakumar
வனிதா விஜயகுமாரிடம் மட்டுமே, விஜயகுமார் குடும்பத்தை சேர்ந்த யாருமே பேசுவது இல்லை. வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கிடைத்த வாய்ப்பை தொடர்ந்து... அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மஞ்சுளா தன்னுடைய மகளுக்கு நடிக்க வந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லி, நடிக்க அனுமதித்த நிலையில், அனிதா விஜயகுமாருக்கு நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்த தகவல் வெளியாகியுள்ளது. வனிதா விஜயகுமார் நடிகையாக அறிமுகமான போது... இந்த தகவல் பரவலாக பேசப்பட்ட ஒன்றாகவும் இருந்ததாம்.
அதாவது இயக்குனர் பாரதி ராஜா, அனிதாவை ஒருமுறை விஜயகுமார் வீட்டில் பார்க்க நேரிட்டபோது... தான் இயக்க இருந்த 'கருத்தம்மா' படத்தில், இரண்டாவது நாயகியாக, அதாவது மகேஸ்வரி நடித்த ரோசி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடியுமா என கேட்டுள்ளார். விஜயகுமார் அனிதாவுக்கு சம்மதம் என்றால் நடிக்கட்டும் என கூறிய நிலையில், மஞ்சுளா அதற்க்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.... அவள் MBBS படிக்க ஆசை படுகிறார். அவள் படிப்பில் கவனம் செலுத்தட்டும் நடிக்க வைக்க இஷ்டம் இல்லை என கூறி விட்டாராம்.
66
Manjula Vijayakumar Avoid Film Opportunity:
பின்னர் இந்த படம் 1994-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 3 தேசிய விருது மற்றும் 4 ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றது. அனிதா படிக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் மஞ்சுளா இந்த செயலை செய்திருந்தாலும், அடுத்த ஆண்டே... அதாவது 1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் மஞ்சுளாவின் மகன் வனிதா விஜயகுமார் ஹீரோயினாக அறிமுகமான போது இந்த தகவல் சிறு விமர்சங்களுக்கும் ஆளானதாம். எது எப்படி இருந்தாலும், மஞ்சுளா ஆசை பட்டது போல் அனிதா ஒரு சிறந்த மருத்துவராக மாறினார். அனிதா ஒரு நடிகை இல்லை என்றாலும்... சமூக வலைதளத்தில் நடிகைகளுக்கு நிகரான ஃபாலோவர்ஸை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.