இவங்கெல்லாம் மருத்துவர்களா! டாக்டர் வேலையை தூக்கியெறிந்துவிட்டு சினிமாவில் டூயட் பாடும் ஹீரோயின்ஸ் இதோ

First Published | Sep 25, 2024, 2:30 PM IST

Actress who are doctors in real life : எம்பி.பி.எஸ் படித்துவிட்டு சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைத்ததும் டாக்டர் வேலையே வேண்டாம் என உதறித்தள்ளிய நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Actress who are doctors in real life

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் படிப்பு முக்கியமில்லை. இங்கு திறமை இருந்தால் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் செல்லலாம். அப்படி படிப்பை பாதியிலேயே கைவிட்டு இங்கு நடிப்பில் சாதித்த நடிகர்கள் ஏராளம். அதேவேளையில் நன்கு படித்த சிலரும் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்து இருக்கிறார். அப்படி மருத்துவத்துக்கு படித்துவிட்டு சினிமாவில் ஹீரோயின்களாக நடிக்கும் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Sai Pallavi

சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவியும் ஒரு மருத்துவர் தான். இவர் கடந்த 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சாய் பல்லவி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தார். எம்பிபிஎஸ் முடித்த கையோடு சினிமாவில் நடிகையாகிவிட்டார் சாய் பல்லவி.

Tap to resize

Aditi Shankar

அதிதி ஷங்கர்

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயினாக ஜொலித்து வருகிறார். தமிழில் இதுவரை இவர் நடிப்பில் விருமன், மாவீரன் ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. இதில் விருமனில் கார்த்திக்கு ஜோடியாகவும் மாவீரனில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார் அதிதி ஷங்கர். இந்த இரண்டு படங்களுமே ஹிட்டான நிலையில், அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா படத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் அதிதியும் எம்பிபிஎஸ் படித்தவர் தான்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 8 செட் அமைக்கும் பணியின்போது விபத்து! ஊழியர் படுகாயம்!

Sreeleela

ஸ்ரீலீலா

தெலுங்கு திரையுலகில் டிரெண்டிங் நாயகியாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. குறுகிய காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக உருவெடுத்த ஸ்ரீலீலாவும் ஒரு டாக்டர் தான். இவர் சினிமா மீதுள்ள ஆசையில் டாக்டர் வேலை பார்க்காமல் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் விஜய்யின் கோட் படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். அப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து மட்ட பாடலில் டான்ஸ் ஆட இருந்தது ஸ்ரீலீலா தானாம். ஆனால் அவர் முதல் படத்திலேயே ஐட்டம் டான்ஸா என சொல்லி ஜகா வாங்கியதால் தான் அவருக்கு பதில் திரிஷாவை ஆடவைத்துள்ளனர்.

Shivani Rajashekar

ஷிவானி ராஜசேகர்

தெலுங்கில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் ராஜசேகர் - ஜீவிதாவின் மகளான ஷிவானியும் சினிமாவில் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக அன்பறிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சில நேரங்களில் சில மனிதர்கள், நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்திருந்தார் ஷிவானி. இவரும் மருத்துவம் படித்து முடித்த கையோடு சினிமாவில் ஹீரோயினாகிவிட்டார்.

இதையும் படியுங்கள்...  ‘மண்ணில் இந்த காதல்’ பாடலை ஈஸியாக பாடிய எஸ்.பி.பி மிகவும் கஷ்டப்பட்டு தம் கட்டி பாடிய பாட்டு எது தெரியுமா?

Latest Videos

click me!