SP Balasubrahmanyam
‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’ என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல், இந்த மண்ணுலகை விட்டு மறைந்த பின்னும் தன்னுடைய இசையால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஒரே நாளில் அதிக பாடல்களை பாடிய கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கும் எஸ்.பி.பி, தன்னுடைய கெரியரில் அதிகம் சேர்ந்து பணியாற்றிய இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான்.
SPB, Ilaiyaraaja
இளையராஜா இசையில் எண்ணில் அடங்காத பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் எஸ்.பி.பி. ஆனால் இந்த நட்புக்குள் சில ஆண்டுகள் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்திருந்தனர். தன்னுடைய பாடல்களை எஸ்.பி.பி கச்சேரிகளில் பாடக்கூடாது என்று இளையராஜா அறிவித்ததால் அவர்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் இளையராஜா பாடல்களை எங்கும் பாடாமல் இருந்தார் எஸ்.பி.பி. ஒரு கட்டத்தில் இருவரும் சமாதானம் ஆகி மீண்டும் சேர்ந்தனர்.
இதையும் படியுங்கள்... வில்லனாக ரஜினியை துரத்தி துரத்தி அடித்த ரகுவரன்... ஒரு படத்தில் கூட கமல்ஹாசன் உடன் நடிக்காதது ஏன்?
mannil indha kadhal song
இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி மிகவும் கஷ்டப்பட்டு பாடிய பாடல் பற்றி தற்போது பார்க்கலாம். எஸ்.பி.பி மிகவும் ரிஸ்க் எடுத்து பாடிய பாடல்கள் ஏராளம். அதில் கேளடி கண்மணி படத்தில் இடம்பெறும் மண்ணில் இந்த காதல் பாடலை எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி இருப்பது போல் தெரியும்.
kanmaniye kadhal enbathu Song
ஆனால் நிஜத்தில் அவர் அவ்வாறு பாடவில்லையாம். அப்பாடலை ஈஸியாக பாடிவிட்டாராம். இளையராஜா சில டெக்னாலஜியை பயன்படுத்தி அவர் மூச்சுவிடாமல் பாடியதை போல் காட்டியதாக கூறிய எஸ்.பி.பி, தான் மிகவும் கஷ்டப்பட்டு பாடிய பாடல் எது என்பதையும் கூறி இருக்கிறார். அதன்படி ஆறிலிருந்து அறுபதுவரை என்கிற படத்தில் இளையராஜா இசையில் தான் பாடிய கண்மணியே காதல் என்பது என்கிற பாடல் தான் தான் மிகவும் சிரமப்பட்டு பாடிய பாடல் என்றும் அந்தப்பாடலை தம் கட்டி பாடுவது கடினமாக இருந்ததாக எஸ்.பி.பி கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பரிதாபங்கள் கோபி சுதாகரையும் பவன் கல்யாண் மிரட்டினாரா? லட்டு பாவங்கள் வீடியோ நீக்கப்பட்டது ஏன்?