ஆனால் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத ஒரு சீரியலும் கூடிய விரைவில் முடிவுக்கு வர உள்ளது உங்களுக்கு தெரியுமா?... அது தான் ஆனந்த ராகம் சீரியல். காமெடி, செண்டிமெண்ட், காதல், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த, ஜனரஞ்சகமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டதில் இருந்தே... இந்த சீரியலின் நேரமும் சரியாக ஒர்க் அவுட் ஆகாமல் போனது. முடிந்த வரை இந்த சீரியலில் இருந்த அணைத்து சஸ்பென்ஸ் ஃபேக்டரும் வெளிக்கொண்டு வர பட்டுவிட்ட நிலையில், சீரியல் கொஞ்சம் சுவாரஸ்யப்பற்று போனதால்... இந்த சீரியலையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டு புதிய சீரியல்களை ஒளிபரப்ப சன் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாம். இதற்க்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட மருமகள், மூன்று முடிச்சு, மற்றும் மல்லி போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெறுவது என்றே கூறப்படுகிறது.
என்ன தான் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றாலும், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு சற்று வருத்தமான விஷயம் என்றே கூறலாம்.