
நடிகை காஜல் அகர்வால், தன்னுடைய திருமணத்திற்கு பின்னர் மாலத்தீவுக்கு ஹனி மூன் சென்று திரும்பிய பின்னர், பல பிரபலங்களின் ஃபேவரட் வெக்கேஷன் ஸ்பாட்டாக மாறியது மாலத்தீவு. மேலும் மாலத்தீவை புரமோட் செய்யவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும்... மாலத்தீவு சில திட்டங்களை அமல் படுத்தியது. அந்த திட்டம் மாலத்தீவுக்கு நன்றாகவே கைகொடுத்தது. அதாவது மாலத்தீவுக்கு வர விரும்பும் பிரபலங்கள் அவர்களின் சோசியல் மீடியாவில், ஒரு மில்லியன் முதல் அதற்க்கு அதிகமாக ஃபாலோவர்ஸை வைத்திருந்தால், உணவு, தாங்கும் இடம், வந்து செல்லும் செலவு உள்ளிட்டவை முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பதில் பிரபலங்கள் மாலத்தீவின் அழகை வெளிப்படுத்தும் விதத்தில் சில புகைப்படங்களை அவர்களது சமூக வளைத்ததில் வெளியிட வேண்டும் என கூறப்பட்டது.
இந்த திட்டத்திற்காகவே தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், வேதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் மாலத்தீவுக்கு சென்று... விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தனர். இதன் பலனாக, சமீப காலமாக மாலத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து கொண்டே சென்றாலும், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே மாலத்தீவை பலர் அதிகம் விரும்புவது இல்லை.
வனிதாவுக்கு ஓகே சொல்லி அனிதாவின் சினிமா வாய்ப்பை வெட்டி விட்ட மஞ்சுளா!
இதற்க்கு முக்கிய காரணம் பட்ஜெட் என்று கூட சொல்லலாம். மாலத்தீவு செல்வதற்கு ஒருவருக்கு 50ஆயிரம் முதல் 75-வரை செலவாகும் நிலையில்... ஹோட்டல், சாப்பாடு என எல்லாமே விலை அதிகமாகவே உள்ளது. பிரபலங்கள் நீச்சல் குளத்தில் இருந்து கொண்ட சாப்பிடுவது போல்.. நாமும் சாப்பிட நினைத்தால் அதற்கே ஒரு லட்சம் செலவாகும். இதை தவிர மற்ற தீவுகளை படகில் சென்று சுற்றி பார்க்கவும், ஹெலிகாப்டரில் சென்று சுற்றி பார்க்கவும் தனி பட்ஜெட். எனவே மாலத்தீவு நடுத்தர மக்கள் சுற்றி பார்க்க தகுந்த இடம் இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே சமீப காலமாக மாலத்தீவை ஒதுக்கி விட்டு, லட்சத்தீவு பக்கம் மக்கள் மற்றும் பிரபலங்களின் கவனம் சென்றுள்ளது.
லட்சத்தீவு, கிட்ட தட்ட மாலத்தீவை போலவே நம் இந்தியாவில் இருக்கும் 36 தீவுகளை கொண்ட, யூனியன் பிரதேசமாகும். இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இந்த தீவின் மொத்த பரப்பளவு சுமார் 30 சதுர கி.மீ மட்டுமே. கேரளக் கரைக்கு அப்பால், 200 முதல் 300 கிமீ தூரத்தில் அரபிக் கடலில் தான் லட்சத்தீவு அமைத்துள்ளது. இந்த தீவில் மொத்தம் 64 ஆயிரம் மக்கள் தான் வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் மீன் பிடித்தல், கருவாடு உற்பத்தி, மீன் ஏற்றுமதி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில்களையே தங்களின் வாழ்வாதாரமாக செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி, லட்ச தீவுக்கு வந்து சென்ற பின்னர், சுற்றுலா பயணிகள் மற்றும் பிரபலங்களின் பார்வையும் லட்சத்தீவு மீது பட, சுற்றுலா மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.
பிக்பாஸ் சீசன் 8 செட் அமைக்கும் பணியின்போது விபத்து! ஊழியர் படுகாயம்!
மாலத்தீவுக்கு நிகரான அழகுடன் இருக்கும் லட்சத்தீவு... சாதாரண மக்களும் சென்று வரும் பட்ஜெட்டில் உள்ளது. மேலும் இந்தியச் சுற்றுலா பயணிகள் இலட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்ல விருப்பினால் முதலில் இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதே போல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலட்சத்தீவின் சில பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்க படுகிறது. பங்கராம் என்கிற தீவை தவிர மற்ற பகுதிகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது.
விமானம் மற்றும் கடல் வழி கப்பல் மூலம் நீங்கள் லச்சத்தீவுக்கு செல்ல முடியும். கப்பல்களில் செல்ல 1000 ரூபாய்க்கு குறைவாகவே வசூலிக்கப்படும் நிலையில், விமானத்தில் செல்ல 5000 முதல் 6000 வரை தான் கட்டணம். ஆனால் கொச்சியில் இருந்து தான் லச்சத்தீவு செல்ல விமானங்கள் மற்றும் கப்பல் சேவை உள்ளது. சென்னை, போன்ற இடங்களில் இருந்து நேரடியாக செல்ல முடியாது. லட்சத்தீவில் உள்ள உணவுகள், ஹோட்டல் போன்றவை அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ற போல் உள்ளது. எனவே... பட்ஜெட் ஃபிரென்ட்லி சுற்றுலாவை விரும்பும் பலர் லச்சத்தீவுக்கு செல்கிறார்கள். பல பிரபலங்களும் லட்சதீப்புக்கு செல்வதை சமீப காலமாக விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ஆர்.பி-யில் டம்மியான ஐந்து முக்கிய சீரியலை அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி!