இந்நிலையில் பேப்பர் ராக்கெட் படம் குறித்து கிருத்திகா செய்தியாளர்களிடம் பேசியது வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிருத்திகா உதயநிதி சிறுவர்கள், பெரியவர்கள், குடும்பத்துடன், பெற்றோர்களுடன் என அனைவரும் பார்த்து ரசிகக்கூடிய தொடராக பேப்பர் ராக்கெட் இருப்பதாக கூறியுள்ளார். அதோடு அழுகை சிரிப்பு என எல்லா உணர்வுகளையும் கொண்டதாக பேப்பர் ராக்கெட் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...கணவருக்கு பாதபூஜை செய்த போட்டோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சூர்யா பட நடிகை
மேலும் இறப்பு எல்லோருடைய வாழ்க்கையிலும் வரும் அதனால் நாம் ஏன் அதை பற்றி கவலைப்பட வேண்டும். நான் சாவையே ஒரு ட்ரிப்பாகத்தான் பார்க்கிறேன். அதனால் தான் இந்த தொடரில் ஒரு சாவு வண்டியை ட்ரிப் வண்டியாக மாற்றி உள்ளேன் என கலகலப்பாக பேசியுள்ளார். இறந்தவர்களை வண்டியில் எடுத்துச் செல்லும்போது அழுகிறோம், வருத்தப்படுகிறோமானால் அவர்களுக்கு அந்த வண்டியில் எங்கோ பயணிக்கிறார்கள் என்று நினைத்தால் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என கூறியுள்ளார். இவரது பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.