பெற்றோர்களின் விழாவில் கூட தனுஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. முன்னதாக இவர் தனது இரண்டு மகன்கள் உடன் பொது இடங்களில் உலா வந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வந்தன.
பிரபல சினிமா இயக்குனரான கஸ்தூரி ராஜா- விஜயலக்ஷ்மி தம்பதிக்கு செல்வராகவன், தனுஷ், கார்த்திகா தேவி, விமலா கீதா என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் தற்போது தங்களது 70-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் தனுஷ், செல்வராகவன் அவரது மனைவி கீதாஞ்சலி உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்று பெற்றோருக்கு பூஜை செய்தது குறித்தான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களின் வரவிற்காக காத்திருக்கிறார். இதில் வாத்தி மூலம் நேரடியாக தெலுங்கு சினிமாவிற்குள் பிரவேசிக்கிறார். வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்தில் இரு வேறு வேடங்களில் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. படம் குறித்தான டீசர் மட்டும் முதல் பார்வை தனுஷின் பிறந்த நாளை ஒட்டி அடுத்தடுத்து வெளியாகி இருந்தது.
இதற்கிடையே ஹாலிவு டில் தனுஷ் நடித்த தி க்ரே மேன் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடிய தனுஷ் தனது மனைவிஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வது குறித்து இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.
இவர்கள் இருவரும் மனமுவந்து பிரிவதாக தங்களது சமூக வலைதளம் மூலம் தெரிவித்திருந்தனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 18 ஆண்டு காதல் திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட இவர்கள் தற்போது அவரவர் பாதையில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது நடைபெற்ற பெற்றோர்களின் விழாவில் கூட தனுஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. முன்னதாக இவர் தனது இரண்டு மகன்கள் உடன் பொது இடங்களில் உலா வந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வந்தன.