கேஜிஎஃப் படத்துக்கு முன்பே களவாணி படத்தில் நடித்திருக்கும் யாஷ்... யாராச்சும் நோட் பண்ணீங்களா?

Published : Sep 03, 2025, 06:13 PM IST

நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்துல நடிச்சது நம்ம எல்லாருக்குமே தெரியும், ஆனால் அவர் அதற்கு முன்னர் களவாணி படத்திலும் நடித்திருக்கிறார்.

PREV
14
KGF actor Yash in Kalavani movie

கன்னட திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. கன்னட சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட படங்கள் என்றால் அது கேஜிஎஃப் மற்றும் காந்தாரா தான். அதில் கேஜிஎஃப் தான் கன்னட சினிமாவின் வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டது. இன்று பல சூப்பர்ஸ்டார்கள் இருக்கும் தமிழ் சினிமா 100 கோடி வசூலை அள்ள திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மைகல்லை கடந்த 2022ம் ஆண்டு எட்டி சாதனை படைத்தது கன்னட சினிமா. இதற்கு முக்கிய காரணம் கேஜிஎஃப் 2 படம் தான். அப்படத்தின் இரண்டு பாகங்களிலும் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உயர்ந்தார் யாஷ்.

24
பான் இந்தியா ஹீரோவாக ஜொலிக்கும் யாஷ்

தற்போது நடிகர் யாஷ் நடிப்பில் இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று டாக்ஸிக். இப்படத்தை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறார் யாஷ். அவருடன் நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதுதவிர இந்தியில் இராமாயணம் என்கிற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். இதில் இராவணன் என்கிற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக அவருக்கு ரூ.200 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளன.

34
களவாணி ரீமேக்கில் யாஷ்

நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்தில் நடிக்கும் முன்னர் வரை தமிழ் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து நடித்து வந்தார். அந்த வகையில் விமல், ஓவியா நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன களவாணி படத்தின் கன்னட ரீமேக்கில் யாஷ் தான் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் கன்னடத்தில் கிராதகா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு வெளியானது. தமிழைப் போல் கன்னட மொழியிலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் யாஷின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக இந்த கிராதகா திரைப்படம் இருந்தது.

44
களவாணி யாஷின் போட்டோஸ்

களவாணி படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஓவியா தான் கிராதகா திரைப்படத்திலும் யாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் யாஷ் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விமலை போல் யாஷும் வேட்டி சட்டையில் களவாணியாக நடித்துள்ளதை பார்த்த ரசிகர்கள், கேஜிஎஃப்-ல் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்த யாஷ், இப்படி ஒரு காதல் படத்தில் கிராமத்து நாயகனாக நடித்துள்ளாரா என வியப்புடன் பார்த்து வருகின்றனர். அப்படம் யூடியூப்பிலும் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories