தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் துளியும் மேக்கப் போடாமல், தன்னுடைய மூதாதேயர் வீட்டிற்கும், மிகவும் பழமை வாய்ந்த திருக்குறுங்குடி கோவிலுக்கும் சென்ற போது எடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ்... தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் நீண்ட நாட்களுக்கு பின் கோவில் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று மகிழ்ந்துள்ளார்.
மேலும் இவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர், உங்களிடம் பிடித்தது இந்த எளிமை தான் என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தற்போது கீர்த்தியின் கைவசம் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வரும் மாமன்னன் மற்றும் சிரின் ஆகிய இரண்டு தமிழ் படங்கள் உள்ளது. மாமனிதன் படத்தில் இவருடைய காட்சிகள் எடுத்து முடிக்க பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சீரின் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள திருக்குறங்குடியில் தன்னுடைய அம்மா வழி பூர்வீக வீடு மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த நம்பி பெருமாள் கோயிலிலை சுற்றி பார்த்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.