இந்த வாரம் வெளியேறிய நிவாவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா? இதுவரை சம்பாதித்துள்ளது எவ்வளவு தெரியுமா?

Published : Nov 21, 2022, 03:12 PM IST

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 43 நாட்களை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் சிங்கப்பூரை சேர்ந்த போட்டியாளரான நிவாஷினி வெளியேறினார். இவர் வாங்கிய மொத்த சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.  

PREV
16
இந்த வாரம் வெளியேறிய நிவாவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா? இதுவரை சம்பாதித்துள்ளது எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, துவங்கிய போது மிகவும் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நிவா, பல்வேறு விமர்சனங்களை கடந்து எப்படி தன்னுடைய வாழ்க்கையில் ஜெயித்தேன் என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக கதை சொல்லும் டாஸ்க்கின் போது கூறி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

26

நிவா பிறந்து வளர்ந்தது எல்லாம், சிங்கப்பூர் என்றாலும் தற்போது சென்னையில் தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தன்னை ஒரு மாடலாகவும், ஆடை வடிவமைப்பாளராகவும், உதவி இயக்குனராகவும் அறிமுகப்படுத்திக்கொண்ட நிவா... மிகக் குறுகிய நாட்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தி என்றே கூறலாம்.

நான்கே படத்தில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த மாரி செல்வராஜ்..! உதயநிதி துவங்கி வைத்த படப்பிடிப்பு..!

 

36

தன்னுடைய கடின உழைப்பால் இவ்வளவு பெரிய தூரத்தை எட்டிய நிவா, கடந்த சில வாரங்களாக நிகழ்ச்சியின் மீது ஈடுபாடு காட்டாததன் பிரதிபலிப்பே அவர் நேற்றைய தினம் வெளியேறியதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

46

நிவா பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோது, சக போட்டியாளராக கலந்து கொண்ட அசல் கோளாறுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அசல் கோளாறு வெளியே சென்றதிலிருந்து, நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அவருக்கு குறைய தொடங்கியது. இதனை பலமுறை நிவா வெளிப்படையாகவே கூறியுள்ளார். மேலும் மீண்டும் அசல் கோளாறை உள்ளே அனுப்பும்படியும் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து வந்தார்.

குட்டி நயனின் கிளாமர் அட்ராசிட்டி.. குட்டை உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த அனிகா! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

56

இந்நிலையில், நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய, நிவா இதுவரை பெற்றுள்ள சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இவர்  ஒரு நாளைக்கு 12000 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் வரை சம்பளம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12,000 வாங்கி இருந்தால் கூட அவர் 42 நாட்களுக்கு மொத்தம்...  5 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக பெற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

66

மேலும் நெற்றிசன்கள் நிவா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், அசல் கோளாறை தான் முதலில் சந்திப்பார் என ட்ரோல்போட்டு கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சண்டை கோழியாக மாறிய தனலட்சுமி...! மைனாவிடம் துவங்கி இப்போ ஷிவினையும் விட்டு வைக்கல..! ப்ரோமோ!

Read more Photos on
click me!

Recommended Stories