Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், 'வாழை' திரைப்படத்தின் படபிடிப்பு இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவும் உள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாத நிலையில், தன்னுடைய நான்காவது திரைப்படமாக 'வாழை' படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.
நான்கு சிறுவர்களை மையப்படுத்து இப்படம் எடுக்கப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்ற பலர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.