உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான பெரிய படங்களை ரிலீஸ் செய்துள்ளது. அதில் தோல்வி அடைந்த படங்களைவிட வெற்றி அடைந்த படங்கள் தான் ஏராளம். இவ்வாறு தொடர்ந்து சக்சஸ்புல் படங்களை வெளியிட்டு வரும் அந்நிறுவனம் அவ்வப்போது சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறது.
ஆம், ரெட் ஜெயண்ட் மூவீஸ் கடந்த நவம்பர் 4-ந் தேதி வெளியிட்ட லவ் டுடே திரைப்படம் தான் தற்போது உதயநிதி படத்துக்கே பாக்ஸ் ஆபிஸில் டஃப் கொடுத்து வருகிறது. இப்படம் ரிலீசாகி மூன்று வாரங்கள் ஆகும் நிலையில், மவுசு குறையாமல் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. அதன்படி இப்படம் 17 நாட்கள் முடிவில் உலகளவில் 65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.