ரெட் ஹாட் ஏஞ்சல் போல் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி மயக்கும் ராஷ்மிகா - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

First Published | Nov 21, 2022, 12:04 PM IST

சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ரெட் ஹாட் ஏஞ்சல் போல் போஸ் கொடுத்தபடி நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் தயாராகி உள்ளது.

வம்சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து இவர் நடனமாடிய ரஞ்சிதமே பாடல் வெளியாகி தற்போது பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

Tap to resize

இதுதவிர சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... இப்போ காசு.. பணம் எல்லாம் இருக்கு... ஆனா! சிறுவயதில் பட்ட கஷ்டங்களை பற்றி பேசி கலங்கிய ராஷ்மிகா

இதேபோல் பாலிவுட்டிலும் 3 படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ராஷ்மிகா. கடந்த மாதம் இவரின் முதல் பாலிவுட் படமான குட் பாய் ரிலீசான நிலையில், அடுத்ததாக சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள மிஷன் மஜ்னு படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இவ்வாறு கோலிவுட் முதல் பாலிவுட் வரை படு பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமூக வலைதளங்களிலும் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவரை 3.5 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அவர்களை கவரும் விதமாக அதில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடும் ராஷ்மிகா, தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ரெட் ஹாட் ஏஞ்சல் போல் போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... நானும் எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்குறது... ட்ரோல் செய்தவர்களை வெளுத்துவாங்கிய ராஷ்மிகா

Latest Videos

click me!