தமிழ் திரையுலகில் திரும்பிய பக்கமெல்லாம் அனிருத் ராஜ்ஜியம் தான். தற்போது இவர் கைவசம் அஜித்தின் 62-வது படம், ரஜினியின் ஜெயிலர், கமல் - ஷங்கர் கூட்டணியில் தயாராகும் இந்தியன் 2, விஜய்யின் தளபதி 67 என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தையும் தற்போது அனிருத் வசம் தான் உள்ளன.
24
இதுதவிர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் அனிருத். அவர் இதற்கு முன் இந்தியில் வெளியான டேவிட் படத்தில் ஒரு பாடலுக்காக மட்டும் இசையமைத்து இருந்தாலும், ஜவான் படம் தான் அவர் இசையமைக்கும் முதல் முழுநீள இந்தி திரைப்படம் ஆகும்.
இதேபோல் தெலுங்கிலும் ஒரு படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் அனிருத். அது தான் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படம். கொரட்டல சிவா இயக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது அப்படத்தின் இசைப்பணிகளை தொடங்கிவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனிருத்.
44
அதோடு இயக்குனர் கொரட்டல சிவா உடன் அமர்ந்து ஆலோசனை செய்யும் போது எடுத்த புகைப்படத்தையும் அனிருத் பகிர்ந்துள்ளார் அனிருத். இவர் ஏற்கனவே தெலுங்கில் பவன் கல்யாணின் அன்யாதவாசி, நானியின் ஜெர்சி மற்றும் கேங் லீடர் போன்ற படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.