தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது தசரா என்கிற தெலுங்கு திரைப்படம் தயாராகி உள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தசரா திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
தசரா படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்தின் புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. நடிகர் நானி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இப்படத்தை புரமோட் செய்து வருகின்றனர். இந்நிலையில், தசரா படக்குழுவுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு கிலோ மதிப்புள்ள தங்கக்காசுகளை பரிசாக வழங்கியுள்ள தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... காஷ்மீரில் உணரப்பட்ட நிலநடுக்கம்.! மரண பீதியில் 'லியோ' படக்குழு... தற்போது அங்கு என்ன நிலவரம்?
தசரா படப்பிடிப்பின் கடைசி நாளின் போது படத்தின் பணியாற்றிய சக நடிகர்கள், டெக்னீஷியன்கள், லைட் மேன்கள் மற்றும் டிரைவர்கள் உள்பட மொத்தம் 130 பேருக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கக்காசை பரிசாக வழங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதன் மதிப்பு மட்டும் ரூ.70 முதல் 75 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த செயலை பார்த்து வியந்துபோன ரசிகர்கள், இந்த மனசு யாருக்கு வரும் என பாராட்டி வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தசரா படத்திற்காக ரூ.3 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. அதில் இருந்து பெரும் தொகையை அவர் படக்குழுவுக்காக செலவிட்டு தங்கக்காசு பரிசளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தசரா படத்தில் வெண்ணிலா என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றியடையாததால். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்கிற எதிர்பார்ப்புடன் ஆவலோடு காத்திருக்கிறாராம் கீர்த்தி.
இதையும் படியுங்கள்... அக்ஷய் குமார் நடித்துள்ள 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்! டைட்டில் வெளியாவதற்கு.. முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு.!