இசையமைப்பாளர் அனிருத்தும், கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் நியூ யார்க்கில் ஜோடியாக வலம் வந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக வலம் வந்தாலும், இவர் அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. அனிருத் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி வைரலானது. பின்னர் சில காரணங்களால் அனிருத்தும், ஆண்ட்ரியாவும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.
24
அனிருத் சர்ச்சைகள்
இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷை அனிருத் காதலிப்பதாக செய்திகள் உலா வந்தன. அது வெறும் வதந்தி என நிரூபிக்கும் விதமாக தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் கரம்பிடித்தார் கீர்த்தி. இதுதவிர பாடகி ஜொனிடா காந்தியை அனிருத் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் உலா வந்தன. ஆனால் இதுபற்றி இருவருமே செவிசாய்க்கவில்லை. இதனால் அந்த காதல் வதந்தி காத்துவாக்குல கடந்து போனது. இதன்பின்னர் இந்த ஆண்டு அனிருத்தும், காவ்யா மாறனும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் உலா வந்தன. அப்போது வதந்திகளை பரப்பாதீர்கள் என ட்வீட் போட்டு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் அனிருத்.
34
அனிருத் - காவ்யா மாறன் போட்டோ வைரல்
இந்த நிலையில், தற்போது அனிருத்தும், காவ்யா மாறனும் ஜோடியாக உலா வரும் புகைப்படம் வெளியாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி அனிருத்தும், காவ்யா மாறனும் நியூயார்க்கில் ஜோடியாக வலம் வந்ததாக குறிப்பிட்டு சில வீடியோக்களும், புகைப்படங்களும் உலா வரத் தொடங்கி உள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், என்னடா நடக்குது இங்க என கேள்வி எழுப்பி வருகின்றன. கடந்த முறை இது வெறும் வதந்தி என சொன்ன அனிருத், தற்போது மீண்டும் விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் தற்போது பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். அவர் கைவசம், விஜய்யின் ஜன நாயகன், அஜித்தின் ஏகே 64, சிம்புவின் அரசன், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2, கமல்ஹாசனின் இந்தியன் 3, பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர பாலிவுட்டில் கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் கிங் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத். இதோடு சில தெலுங்கு படங்களும் அனிருத்தின் கைவசம் இருக்கின்றன. இத்தனை பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் அவர் காதல் வதந்தியில் சிக்கி உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.