ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் ஒன்று, ஒரு வருடத்தை நிறைவு செய்யும் முன்னரே அதன் கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து வருகின்றது.
சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களில் கோலோச்சி வரும் தொலைக்காட்சி என்றால் அது ஜீ தமிழ் தான். இதில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தியது. செம்பருத்தி சீரியல் முடிவுக்கு வந்த பின்னர் டிஆர்பி ரேஸில் ஜீ தமிழ் சீரியல்கள் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. குறிப்பாக டாப் 10 பட்டியலிலும் ஜீ தமிழ் சீரியல்களுக்கு இடம்கிடைப்பதில்லை. சமீப காலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து சில சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றன. அந்த வரிசையில் தற்போது புத்தம்புது சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளது.
24
முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல்
அந்த சீரியல் வேறெதுவுமில்லை. ஜீ தமிழில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மனசெல்லாம் சீரியல் தான். இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாம். இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின்களோடு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களிலேயே ஒரு ஹீரோ விலகிவிட்டார். இந்த சீரியல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கி ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், திடீரென இந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்திருக்கிறார்கள்.
34
மனசெல்லாம் சீரியல் கிளைமாக்ஸ்
தற்போது மனசெல்லாம் சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம். இது முழுக்க முழுக்க ஜீ தமிழ் சேனலின் முடிவு தானாம். அதில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கே திடீரென தான் இந்த தகவல் தெரியவந்ததாம். நன்றாக சென்றுகொண்டிருந்த சீரியலை ஏன் திடீரென முடிவுக்கு கொண்டு வருகிறார்கள் என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சீரியலில் ஹீரோவாக தீபக் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வென்பா நடித்து வந்தார். இந்த சீரியல் முடிவுக்கு வரும் முன்னரே ஒரு புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளார் தீபக்.
விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் அய்யனார் துணை சீரியலின் தெலுங்கு ரீமேக்கில் தான் மனசெல்லாம் சீரியல் நாயகன் தீபக் நடிக்க கமிட்டாகி உள்ளார். மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வர உள்ளதால், அதற்கு பதிலாக மற்றொரு புது சீரியலை களமிறக்க ஜீ தமிழ் முடிவெடுத்துள்ளது. அதன்படி அண்ணாமலை குடும்பம் என்கிற சீரியல் மனசெல்லாம் சீரியலுக்கு பதிலாக ஒளிபரப்பப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.