எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டு இராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும் சக்தி கடத்தப்படுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவகி பற்றிய உண்மையை தேடி இராமேஸ்வரம் சென்றிருந்த சக்திக்கு அங்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. தேவகியிடம் இருந்த சொத்துக்களை எல்லாம் ஆதி குணசேகரனின் தந்தை ஆதி முத்து அபகரித்ததையும், தேவகியை ஆதி குணசேகரன் கொலை செய்ததையும் கண்ணதாசன் சக்தியிடம் சொல்லிவிடுகிறார். அதுமட்டுமின்றி ஆதி குணசேகரனிடம் இருந்து தப்பித்து சென்ற தேவகியின் மகன் ராணா, என்ன ஆனார் என்று சக்தி கேட்டதற்கு, அதைப்பற்றி கண்ணதாசன் சொல்ல மறுத்துவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
வீட்டிற்கு வந்த விசாலாட்சி
ஆதி குணசேகரன், இராமேஸ்வரத்தில் உள்ள தன்னுடைய ஆட்களுக்கு போன் போட்டு, என்ன ஆனது என்பதை கேட்க, அதற்கு அவர்கள், சக்தி தங்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். இதையடுத்து நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அவனை மடக்கிப் பிடித்து, அவனிடம் இருக்கும் ஆதாரங்களை எல்லாம் வாங்கிட்டு அவனை அனுப்பிவிடுங்கள் என சொல்கிறார். மறுபுறம் தன்னுடைய அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்த விசாலாட்சி, நீண்ட நாட்களுக்கு பின் வீட்டுக்கு திரும்புகிறார். அதுவும் தன் தம்பி சாமியாடியோடு வீட்டுக்கு வருகிறார். அங்கு வந்ததும் முல்லை அவரிடம் வீட்டில் நடந்த பிரச்சனைகளை பற்றி கூறுகிறார்.
34
பெரிய உசுரு போகப் போகிறதாம்
இதையடுத்து வீட்டிற்குள் சென்று தன் மருமகள்களிடம் கறாராக பேசும் விசாலாட்சி, இது என்மகன் உழைச்சு சம்பாதிச்சு வாங்குன சொத்து என பெருமை பேச, அதைக்கேட்டு கடுப்பான நந்தினி, எங்களுக்கு எல்லா உண்மையும் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்க, சாமியாடியோடு வந்த அவரின் சிஷ்யனுக்கு திடீரென சாமி வருகிறது. அப்போது அவர் உங்க குடும்பத்துல ஒரு பெரிய உசுரு போகப்போகுது என சொல்ல, அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதனால் பதறிப்போகும் விசாலாட்சி, யாருக்கு என்ன ஆகப்போகிறதோ என்று பதறுகிறார். ஜனனியும் இதைக்கேட்டு குழம்பிப் போகிறார்.
ஒருவேளை சக்திக்கு ஏதாவது ஆகிவிடுமோ என அனைவரும் பதறிக்கொண்டிருக்க, இராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி வரும் சக்தியை ஒரு ரெளடி கும்பல் சுத்துப்போடுகிறது. அவரின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே அடித்து அவரை கடத்திச் செல்கிறார்கள். ஆதி குணசேகரன் சக்தியை அடித்து அவரிடம் இருக்கும் ஆதாரங்களை வாங்கி வர சொல்லி ஆள் அனுப்பி இருந்தார். ஆனால் தற்போது வந்த ரெளடிகள் சக்தி மீது கைவைக்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, அது ராணா அனுப்பிய ஆட்களாக இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. ஆதி குணசேகரனால் சக்தி உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்து ராணா அவரை காப்பாற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.