ஷாக் கொடுக்கும் கார்த்திகை தீபம் 2 சீரியல்: 2 மணி நேர எபிசோடாக கும்பாபிஷேகம் ஒளிபரப்பு!

Published : Nov 13, 2025, 07:00 AM IST

Karthigai Deepam 2 Serial Kumbabishekam : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இந்த வாரம் 16ஆம் தேதி ஞாயிறன்று கும்பாபிஷேக தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

PREV
17
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகம்

கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தனது தாத்தா பாட்டி ஊருக்கு வந்த கார்த்திக்கின் ஆசை இப்போது நிறைவேறப் போகிறது. நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்தா கோயில் கும்பாபிஷேகம் இப்போது கார்த்திக்கின் முயற்சியால் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே சிறப்பாக தொடங்கப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சியானது கார்த்திக்கின் அம்மா எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்ததன் காரணமாக நின்று போனது.

27
முகூர்த்தக்கால் நடும் விழா

இப்போது மீண்டும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோயில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் நடும் விழாவும் நடைபெற்றது. பத்திரிக்கை அடித்து வந்து ஊர் முழுவதும் கொடுக்கப்பட்டது. இதனை நிறுத்துவதற்கும் வேலைகள் நடைபெற்றது. ஆனால், கார்த்திக் அதையெல்லாம் முறியடித்து நல்லபடியாக முகூர்த்தக்கால் நடும் விழாவை நடத்தி முடித்தார்.

37
யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு

இனி அடுத்தடுத்து யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு, கும்பாபிஷேகம் என்று நடைபெற இருக்கும் நிலையில் கார்த்திக் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். இத்தனை நாட்களாக சாமுண்டீஸ்வரியை டார்க்கெட் செய்து வந்த சிவனாண்டி, முத்துவேல் மற்றும் காளியம்மாள் இப்போது கார்த்திக்கின் மாமனாரான ராஜராஜனை டார்க்கெட் செய்துள்ளனர். ராஜ சேதுபதியின் மகனான ராஜராஜனை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

47
கார்த்திகை தீபம் 2 - கும்பாபிஷேகம் எபிசோடுகள்

அப்படி ராஜ ராஜனை கொலை செய்தால் இந்த கும்பாபிஷேகம் நடைபெறாது அல்லவா, அதற்காக இந்த திட்டம் போடப்பட்டுள்ளது. இதற்காக வெளியூரிலிருந்து ஆட்கள் இறக்கப்பட்டுள்ளது போன்று தெரிகிறது. இந்த நிலையில் தான் ஜீ தமிழ் சீரியலின் கார்த்திகை தீபம் 2 தொடரில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதுவும் 2 மணி நேர எபிசோடாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாலை 5 மணிக்கு கும்பாபிஷேகம் எபிசோடுகள் தொடங்கி 7 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

57
புரோமோ வீடியோ - ஜீ தமிழ் யூடியூப்

இது தொடர்பான புரோமோ வீடியோவை ஜீ தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், கலைகட்டும் கார்த்திகை தீபத்தின் கும்பாபிஷேக திருவிழா என்று புரோமோ தொடங்குகிறது. கும்பாபிஷேகத்தை நிறுத்த ராஜராஜனை கொலை செய்ய காளியம்மாள் திட்டமிடுகிறார். கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருப்பதற்கு கார்த்திக்கின் தாய் மாமன் காரணமாக இருக்க போகிறான் என்று காளியம்மாள் டயலாக் பேசுகிறார்.

67
மாமாவிற்கு எதுவும் ஆகாது - கார்த்திக்

மாமாவிற்கு எதுவும் ஆகாது. நான் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று கார்த்திக் டயலாக் பேசுவது போன்ற காட்சிகள் இந்த புரோமோவில் இடம் பெற்றுள்ளது. எது எப்படியோ ஜவ்வு மிட்டாய் மாதிரி கும்பாபிஷேகத்தை வைத்து எபிசோடுகளை இழுத்து வந்த கார்த்திகை தீபம் 2 சீரியல் இப்போது கும்பாபிஷேகத்தை உடனே நடத்தி முடிக்க 2 மணி நேர எபிசோடுகளை ஒளிபரப்பு செய்கிறது.

77
கார்த்திகை தீபம் 2 ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இது கார்த்திகை தீபம் 2 ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 மணி நேர எபிசோடுகள் என்பதால் எப்படியும் இதில் கும்பாபிஷேகம் நடத்தில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடந்து முடிந்துவிட்டால் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சொல்வாரா அல்லது கார்த்திக் பற்றிய உண்மைகளை தீபாவதி வெளிப்படுத்துவாரா என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories