உண்மையை தெரிந்து கொண்ட தீபாவதி – கார்த்திக்கிற்கு ஷாக் கொடுக்கும் சாமுண்டீஸ்வரி!

Published : Nov 12, 2025, 10:23 PM IST

கார்த்திக் யார் என்ற உண்மையை தீபாவதி தெரிந்து கொண்ட நிலையில் அதைப் பற்றி சாமூண்டீஸ்வரியிடம் சொல்ல முடிவு செய்துள்ளார்.

PREV
15
கார்த்திகை தீபம் 2 சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கார்த்திக் யார் என்ற உண்மையை கண்டுபிடிக்க சொல்லி சாமுண்டீஸ்வரி Detective Agent தீபாவதியிடம் கூறியிருந்தார். அவரும் பல நாட்கள் கடுமையாக அலசி ஆராய்ந்து இப்போது கார்த்திக் யார் என்ற உண்மையையும், சாமுண்டீஸ்வரியின் மருமகன் யார் என்ற உண்மையையும் தெரிந்து கொண்டார்.

25
ஜீ தமிழ் சீரியல், கார்த்திக், ரேவதி

இதைப் பற்றி ரத்தின சுருக்கமாக தனது டீமிடம் காண்பித்து அவர்களிடம் ஆலோசனையும் பெற்றுக் கொண்டார். மேலும், அவர்கள் கார்த்திக் தரப்பு நியாயத்தையும் ஆளாளுக்கு எடுத்து சொன்னார்கள். அப்படியில்லை என்றால் இப்போதைக்கு கார்த்திக் யார் என்ற உண்மையை சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள்.

35
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு

ஆனால், அதையெல்லாம் கேட்காத தீபாவதி அது நம்முடைய தொழிலுக்கு செய்யும் துரோகம் அப்படி இப்படி என்று சொல்லி மறுத்துள்ளார். மேலும், சாமுண்டீஸ்வரிக்கும் போன் போட்டு பாட்டியின் பேரன் யார் என்றும், உங்களுடைய மருமகன் யார் என்றும் கண்டுபிடித்துவிட்டேன். அதைப் பற்றி சொல்ல இந்த இடத்திற்கு வாருங்கள் என்று சொன்னார்.

45
கார்த்திகை தீபம் 2 சீரியல்

தீபாவதி சொன்னது போன்று அவர் அந்த இடத்திற்கு வந்துவிட்டார். சாமுண்டிஸ்வரி புறப்படும் நேரத்தில் படியில் தடுக்கி கீழே விழ பார்த்தார். அதே போன்று தான் நில வாசல் படியிலும் விழ பார்த்தார். அப்படியிருந்தும் அவர் புறப்பட்டு செல்ல தயாராகவே இருந்தார். அப்போது தான் காரில் ஏறும் போது பாம்பு அவரை கடித்தது.

55
தீபாவதி, சாமுண்டீஸ்வரி

இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு டாக்டருக்கும் போன் போட்டு தெரியப்படுத்தினர். பின்னர் மருத்துவர் வந்து அவருக்கு டிரீட்மெண்ட் அளித்தார். குட்டி விஷ பாம்பு தான் உங்களை கடித்தது. விஷத்தை எடுத்துவிட்டது. இனி பயப்பட தேவையில்லை என்றார்.

அப்போது தான் சாமுண்டீஸ்வரிக்கு தீபாவதி போன் போட்டார். தன்னை பாம்பு கடித்துவிட்டது என்பது குறித்த விஷயத்தை சாமுண்டீஸ்வரி சொல்ல பின்னர் நாளைக்கு இதே இடத்திற்கு வரும்படி கூறினார். கடைசி வரை பாட்டியின் பேரன் யார் என்றும் தன்னுடைய மருமகன் யார் என்ற உண்மையையும் கேட்க, அதைப் பற்றி நேரில் தான் சொல்ல முடியும் என்று கூறிவிட்டார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories