முத்தையா இயக்கத்தில் கார்த்தி, கொம்பன் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள 'விருமன்' திரைப்படம், ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
210
இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று மதுரையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்தது.
மதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ராஜா முத்தையா மன்றத்தின் நடந்த இசை வெளியீட்டு விழாவிற்காக மிகப்பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு, தாரை தப்பட்டை, பறை, ஆட்டம், பாட்டம், பார்த்தாலும் போஸ்டர் என திருவிழாவை போல் காட்சியளித்தது.
410
சூர்யாவின் 2 டி தயாரித்துள்ள, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் மட்டும் இன்றி ஏராளமான ரசிகர்கள் மற்றும் மதுரை மக்கள் கலந்து கொண்டனர்.
கார்த்திக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
610
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள 'விருமன்' திரைப்படத்தில், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கான ஒளிப்பதிவை செல்வகுமார் மேற்கொள்ள படத்தொகுப்பை வெங்கட்ராஜன் செய்துள்ளார். முன்னதாக இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், திடீர் என இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
810
இன்று மிக பிரமாண்டமாக நடந்து வரும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யாவும் அவரது தம்பி... 'விருமன்' படத்தின் நாயகன் கார்த்தி வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தினர்.
அதே போல் படத்தின் நாயகியான அதிதி, பிங்க் நிற கிராண்ட் லெஹங்காவில் ஜொலிஜொலிக்கும் தேவதை போல் கலந்து கொண்டு, தன்னுடைய அழகால் ரசிகர்களை வசீகரித்தார்.
1010
மேலும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் கார்த்தியின் தந்தையாக நடித்துள்ள பிரகாஷ் ராஜ் தான் அவரை எதிர்க்கும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.