ஓடிடி தளத்தில் வெளியாகும் சாய்பல்லவியின் 'கார்கி' திரைப்படம்..!

Published : Aug 03, 2022, 07:03 PM IST

சாய் பல்லவி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி விமர்சனம் ரீதியாக  பாராட்டுக்களை குவித்த கார்கி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
ஓடிடி தளத்தில் வெளியாகும் சாய்பல்லவியின் 'கார்கி' திரைப்படம்..!

இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்  இயக்கத்தில், இந்த படத்தை பிளாக்கி, ஜெனி & மை லெஃப்ட் ஃபுட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்து  திரைப்படம் தான் 'கார்கி'. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார்.  கடந்த 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்தை சூர்யாவின் 2டி  நிறுவனம் தமிழகத்தில் விநியோகம் செய்தது.

24

'பிரேமம்' படத்திற்கு பிறகு இந்த படத்தில் சாய் பல்லவி 'கார்கி' படத்தில், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆசிரியையாக நடித்திருந்தார். மேலும் தவறே செய்யாமல் பாலியல் வழக்கில் சிக்கி கொள்ளும், தன்னுடைய தந்தையை, அதில் இருந்து மீட்க போராடும் மகளாக நடித்திருந்தார். எந்த ஒரு சினிமா தனமும் இல்லாமல், ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியது இந்த படத்தின் தரத்தை உயர்த்தியது.

34

பெண்கள் முதல் குழந்தைகள் வரை... ஒவ்வொரு நாளும் சில காம கொடூரர்களால் சந்திக்க நேரும் சமூக பிரச்சனை குறித்து இப்படம் பேசி இருந்ததால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வெகுவாக இப்படத்தை பாராட்டி இருந்தனர். அதே போல் தெரியாமல் கூட இது போன்ற பிரச்சனைகளில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிக்கினால், அவர்கள் எந்த அளவிற்கு மீடியா மூலமாகவும், வெளியுலகில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது என்பதை எடுத்து காட்டியது இப்படம்.

44

இப்படம் ரிலீஸ் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி... ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சாய் பல்லவி நடித்த 'கார்கி' படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.  

Read more Photos on
click me!

Recommended Stories